இங்கர்சால் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Ingersoll Motivational Quotes in Tamil
இங்கர்சால் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Ingersoll Motivational Quotes in Tamil
1.ஒரு நல்ல பெண்மணியின் பூரண அன்பை ஒருவன் அடைந்துவிட்டால் அவன் பிச்சைக்கார வாழ்வு நடத்தி செத்துவிட்டாலும் அவன் வாழ்க்கையில் வெற்றியடைந்தவனாவான்.
-இங்கர்சால்
2.பொது அறிவு இல்லாத கல்வியை விட, கல்வி இல்லாத பொது அறிவானது ஆயிரம் மடங்கு சிறந்தது.
-இங்கர்சால்
3.மனசாட்சி
இல்லாத தைரியம்
என்பது ஒரு
காட்டு விலங்கினைப்
போன்றது.
-இங்கர்சால்
4.பிறரைக் குறைத்து
மதிப்பிட வேண்டாம்.
அது உங்கள்
உள்ளத்தின் மதிப்பைக்
குறைக்கும்.
-இங்கர்சால்
5.மனம் நல்லதாக,
சுத்தமானதாக, பண்புடன்
பழகக்கூடியதாக, நம்பிக்கை
உள்ளதாக இருந்தால்
நாம் கோயிலைத்
தேடிப் போகவேண்டியது
இல்லை.
-இங்கர்சால்
6.சிந்தனை
சந்தேகத்தை வளர்க்கிறது.
சந்தேகம் ஆராய்ச்சியை
வளர்க்கிறது. ஆராய்ச்சி
உண்மையை வளர்க்கிறது.
உண்மை எல்லா
மூட நம்பிக்கைகளையும்
அழிக்கிறது.
-இங்கர்சால்
7.நாய்
குரைக்கும் போதெல்லாம்
நடப்பதை நிறுத்தினால்
ஊர் போய்
சேர முடியாது
-இங்கர்சால்
8.உனக்காகப்
பொய் சொல்லுபவன்
உனக்கு எதிராகவும்
சொல்வான்.
-இங்கர்சால்
9.தொழில்
இல்லாத கல்வி
நீரின்றி வாடும்
தாவரத்தைப் போன்றது.
-இங்கர்சால்
10.விடியற்காலையில்
எழுந்து செயல்படுபவனுடைய
வாழ்கை சூரியனைப்போல்
என்றும் பிரகாசமாயிருக்கும்.
-இங்கர்சால்
11.பணம் என்பது
உப்பு நீர்,
குடிக்க குடிக்கத்
தாகம் அதிகமாவதே
அதன் தன்மை.
-இங்கர்சால்
12.அறியாமையைக் காட்டிலும்
இழிவான அடிமைத்தனம்
வேறு கிடையாது.
-இங்கர்சால்
13.நீ
வீணாக்கும் ஒவ்வொரு
நொடியும் உன்னை
வறுமைக்குள் தள்ளிவிடும்.
-இங்கர்சால்
14.துருப்பிடித்த இரும்பும்
சோம்பல் ஏறிய
உடம்பும் உதவாது.
-இங்கர்சால்
15.தேகத்தை உழைப்புத்
தீயில் புடமாக்கு,
உனது எதிர்காலம்
தங்கமாய் மின்னும்.
-இங்கர்சால்
16.குழந்தை
பிறந்து வளர்ந்து
அறிவு வளர்ச்சி
எற்படுவதற்குள்ளாகவே அவர்கள்
மனதில் மதம்
என்ற நஞ்சைப்
புகுத்தி விடுகிறான்
மதவெறியன்.
-இங்கர்சால்
17.விரைவில் படுக்கச்
சென்று, காலம்
தாழ்ந்து எழுபவனின்
தலையில் வறுமை
கூடுகட்டும்.
-இங்கர்சால்
18.அன்பு
என்ற உணர்ச்சி
நம்மிடத்தில் இல்லை
என்றால் நாம்
மிருகங்களைவிட கீழானவர்கள்!
உலகில் எங்கு
அன்பு இருக்கிறதோ,
அதுவே சுவர்க்கம்
அதில் வாழும்
நாமே கடவுள்கள்!
-இங்கர்சால்
19.சுயமாக
சிந்தனை செய்யாத
மனிதன் அடிமை,
அவன் தனக்கு
மட்டும் துரோகியல்ல
மற்றவர்களுக்கும் துரோகியாகின்றன.
-இங்கர்சால்
20.மனிதன்
தன் மனதில்
எழும் கேள்விகளுக்குத்
தனக்குத்தானே பதில்
அளிக்கக்கூடிய பயிற்சியைப்
பெற வேண்டும்.
வேத நூலைப்
படிப்பதினால், தன்னைக்
காப்பாற்றிக் கொள்ள
முடியாது.
-இங்கர்சால்
21.வாழ்நாள் முழுதும்
செம்மறியாடாக இருப்பதைவிட
ஒரே ஒரு
நாள் மட்டும்
சிங்கமாக இருப்பது
நல்லது.
-இங்கர்சால்
22.நம் சிரிப்பு,
அடுத்தவனுக்கு கண்ணீரை
வரவழைக்கிறதென்றால் நாமே
நம் பற்களைத்
தட்டிக்கொள்ளவேண்டும்.
-இங்கர்சால்
23.மகிழ்ச்சியாக
இருப்பதற்கான நேரம்
இப்பொழுதே. மகிழ்ச்சியாக
இருப்பதற்கான இடம்
இங்கேயே. மகிழ்ச்சியாக
இருப்பதற்கான வழி
மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதே.
-இங்கர்சால்
24.அனைத்துப் புனிதமான
செயல்களிலும் கடவுள்
உறைந்திருக்கிறார்.
-இங்கர்சால்
25.உங்கள் இன்பத்தையும்
மகிழ்ச்சியையும் யாரும்
கொடுக்க முன்வர
மாட்டார்கள் ஏனென்றால்
அதை ஏற்படுத்தும்
உரிமை உங்களுக்குரியது.
-இங்கர்சால்
26.உன்
நல்ல செயல்களின்
மூலம் பிறருக்கு
வழிகாட்டியாக இரு.
-இங்கர்சால்
27.வளமான
காலத்தில் நண்பர்கள்
நம்மைத் தெரிந்து
கொள்கிறார்கள். வறுமைக்
காலத்தில் நண்பர்களை
நாம் தெரிந்துகொள்கிறோம்.
-இங்கர்சால்
28.வானத்தைவிட
உயர்ந்தது இனிமையான
சொல் எனவேதான்
ஒரு சொல்
வெல்லும் ஒரு
சொல் கொல்லும்
என்பர்.
-இங்கர்சால்
29.தங்கள்
குழந்தைகளை அதிகாலையில்
எழுப்ப வேண்டியவர்கள்
குழந்தையின் முதுகில்
ஓர் அடி
கொடுத்து எழுப்புவதைவிட
முகத்தில் ஓர்
முத்தம் கொடுத்து
எழுப்புதல் வேண்டும்.
இதைக்கூட செய்ய
முடியாதென்று கூற
முடியுமா?
-இங்கர்சால்
30.உலகில்
விலை மதிக்க
முடியாததும் அன்புதான்,
மலிவான விலை
உள்ளதும் அன்புதான்.
-இங்கர்சால்
31.மனித
சமுதாயத்தை ஒரே
நாளில் சீர்திருத்திவிட
முடியாது. அதற்கு
நீண்ட காலம்
பிடிக்கும். ஒவ்வொருவரும்
தம்மைச் சமுதாயச்
சீர்திருத்தவாதி என்று
நினைத்துக் கொள்ள
வேண்டும். சகோதர
மனிதனுக்கு உங்களால்
செய்ய முடிந்த
நன்மைகளையெல்லாம் செய்யுங்கள்.
-இங்கர்சால்
32.இந்த பூமியில்
தைரியத்திற்கான மிகப்பெரிய
சோதனை என்பது
இதயத்தை இழக்காமல்
தோல்வியினை தாங்கிக்கொள்வதே.
-இங்கர்சால்
33.வாழ
முடிவுசெய்யுங்கள். முடியும்
என்று ஆக்கப்பூர்வமாக
சிந்தித்தால் துன்பங்களைத்
துன்பப்பட வைத்துத்
தொடர்ந்து செயலாற்றல்
கொண்டவர்களாக வாழலாம்.
-இங்கர்சால்
34.உங்களுக்காக
நீங்கள் கோரும்
உரிமைகளை, நீங்களும்
ஒவ்வொரு மனிதருக்கும்
கொடுத்திடுங்கள்.
-இங்கர்சால்
35.மனிதனின்
உன்னதமான உழைப்பே,
ஒரு நேர்மையான
கடவுள்.
-இங்கர்சால்
36.நீங்கள் எதிலும்
முதலில் வரவேண்டுமா?
முதலில் விழித்தெழுங்கள்.
-இங்கர்சால்
37.எங்கும் இருள்
என்பது கிடையாது.
அறியாமைதான் இருள்.
அந்த அறியாமை
இருளை விரட்ட
நாம் உலகமெங்கும்
அறிவொளியைப் பரப்புவோம்
-இங்கர்சால்
38.அறியாமைதான்
துயரத்தின் தாய்
-இங்கர்சால்
39.அன்பில்லாத
இடத்தில் தான்
கோபம், முட்டாள்
தனம், விரோதம்
எல்லாம் இருக்கும்
-இங்கர்சால்
40.அறிவைப் பெருக்கும்
படைக் கருவிகளை
நான் நூலகங்களிலிருந்தே
பெற்றுக் கொள்கிறேன்.
-இங்கர்சால்
41.வீழ்ச்சியில்
கலக்கமோ எழுச்சியில்
மயக்கமோ கொள்ளாதே
-இங்கர்சால்
42.படித்து அறிபவனைவிட
அனுபவித்து உணர்பவன்
அறிஞன்.
-இங்கர்சால்
43.ஆண்கள்
மரங்கள். பெண்கள்
அந்த மரத்தை
ஆதாரமாகக் கொண்டு
அதனைச் சுற்றியிருக்கும்
கொடிகள். குழந்தைகள்
அந்தக் கொடிகளில்
பூத்துக்குலுங்கும் மலர்கள்.