ஜேம்ஸ் ஆலன் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
James Allen Motivational Quotes in Tamil
1.எவன் சந்தேகத்தையும், அச்சத்தையும் வெற்றி கொண்டானோ அவனே தோல்வியையும் வெற்றி கொண்டவனாவான்.
-ஜேம்ஸ் ஆலன்
2.மனதை உற்சாகப்படுத்து. உன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்படு; அதைரியமூட்டுபவர்களை அருகில் விடாதே.
-ஜேம்ஸ் ஆலன்
3.காலம் உனது உயிராகும். அதை வீணாக்குவது உன்னை
நீயே கொலை செய்வதற்கு ஒப்பாகும்.
-ஜேம்ஸ் ஆலன்
4.அலட்சியம் இல்லாமல் இதயத்தை சுத்தப்படுத்திக் கொண்டே இருந்தால் போதும் அனைத்தும் நல்லவையாக அமையும்.
-ஜேம்ஸ் ஆலன்
5.உன்னதமான வாழ்விற்காக எல்லோருமே ஏங்குகிறோம்; ஆனால், அதற்கு
அடிப்படையான உன்னதமான ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தயங்குகிறோம்.
-ஜேம்ஸ் ஆலன்
6.ஒழுக்கம் உள்ள மனிதன்
பெருந்தன்மையும் மரியாதையும் கலந்த
சொற்களையே பேசுவான்.
-ஜேம்ஸ் ஆலன்
7.மற்றவர்களுக்கு மகிழ்ச்சியளித்தல், மற்றவர்களின் கஷ்டங்களைப் போக்குதல் இவையே நமது கடமைகள். இரக்கம் என்ற அரிய
குணம் இருந்தால் கடைசி
வரை இந்த இரண்டு
பணிகளையும் சிறப்பாகச் செய்ய
முடியும்.
-ஜேம்ஸ் ஆலன்
8.உன் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் பொருள் நிறைந்ததாகவும், இன்பம்
பயப்பதாகவும் இருக்கட்டும். எக்காலத்திலும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதுவாயாக.
-ஜேம்ஸ் ஆலன்
9.மனநேர்மை உடல் ஆரோக்கியத்தை உண்டு பண்ணுவது போல
ஒருவன் விரும்பும் செயலையும் அது நேர்வழியில் செய்து
முடித்துவிடுமாறும் செய்கிறது.
-ஜேம்ஸ் ஆலன்
10.பணம், ஆற்றல், திறமை
இவையெல்லாம் வாழ்க்கைக்குரிய பொருள்களே அன்றி
அவையே வாழ்க்கை ஆகா.
-ஜேம்ஸ் ஆலன்
11.எவன் மற்றவர்களின் வேலைகளின் வீணாகத் தலையிடாமல் தன்னுடைய வாழ்வின் கடமைகளை அறிவுடனும் அக்கறையுடனும் கவனிக்கிறானோ, அவனுக்கு வெற்றி,
கௌரவும், செல்வாக்கு ஆகிய
மூன்றும் வந்து சேரும்.
-ஜேம்ஸ் ஆலன்
12.உண்மையுடன் வாழ்வதே இறைவனை
வணங்குவதற்கு ஒப்பானது என்பதைப் புரிந்து கொண்டவரின் வெற்றிகள் நிலைத்து நின்று ஒளி
வீசுகின்றன.
-ஜேம்ஸ் ஆலன்
13.முயற்சி செய்கிறவரை நம்
திறமையே தெரியாது
-ஜேம்ஸ் ஆலன்
14.மற்றவர்கள் செயலால் மகிழ்ச்சி அடையாத மனிதனால், நல்ல
செயல்கள் எதையும் செய்யமுடியாது.
-ஜேம்ஸ் ஆலன்
15.செயலை விதையுங்கள்; பழக்கம் உருவாகும். பழக்கத்தை விதையுங்கள்; பண்பு உருவாகும். பண்பை
விதையுங்கள்; எதிர்காலம் உருவாகும்.
-ஜேம்ஸ் ஆலன்
16.ஒரு மனிதனின் தலைசிறந்த நண்பர்கள் அவனுடைய பத்துவிரல்கள்.
-ஜேம்ஸ் ஆலன்
17.உணர்ச்சியுள்ள மனிதன் பிறரைத் திருத்துவதில் நேரத்தைச் செலவு
செய்கிறான். ஆனால், அறிவுள்ள மனிதனோ தன்னைத் திருத்திக் கொள்வதில் கவனத்தைச் செலுத்துகிறான்.
-ஜேம்ஸ் ஆலன்
18.எவன் மற்றவர்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ, அவனால் நல்ல
செயல்கள் எதையும் செய்ய
முடியாது.
-ஜேம்ஸ் ஆலன்
ஜேம்ஸ் ஆலன் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
James Allen Motivational Quotes in Tamil