ஜான் ரஸ்கின் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | John Ruskin Motivational Quotes in Tamil
ஜான் ரஸ்கின் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
John Ruskin Motivational Quotes in Tamil
1.ஒரு சிறிய அன்பை
குழந்தைகளிடம் செலுத்திப் பாருங்கள், அதற்கான பெரிய பலனை
அவர்களிடமிருந்து திரும்பப் பெறுவீர்கள்.
-ஜான் ரஸ்கின்
2.பணத்தைத் தவறான வழியில் இழப்பது குற்றம்; தவறான
வழியில் தேடுவது அதைவிடவும் குற்றம்.
-ஜான் ரஸ்கின்
3.அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது.
-ஜான் ரஸ்கின்
4.வாக்கு தவறாத மனிதன்
மனிதருள் மாணிக்கம்.
-ஜான் ரஸ்கின்
5.எப்பொழுது அன்பு மற்றும் திறமை இரண்டும் ஒன்றிணைந்து செயல்படுகின்றதோ, அப்பொழுது ஒரு
தலைசிறந்த வெற்றியை எதிர்பார்க்கலாம்.
-ஜான் ரஸ்கின்
6.பொய்க் கல்வி பெருமை
பேசும். மெய்க்கல்வி தாழ்த்தி சொல்லும்.
-ஜான் ரஸ்கின்
7.மருந்து சிலசமயங்களில் பலனளிக்காமல் இருக்கக்கூடும். ஆனால் விஷமோ
ஒருப்போதும் விளைவு தராமல்
போகாது.
-ஜான் ரஸ்கின்
8.நன்றாக எழுதுவதைப் போன்றது சத்தியம். அது பழக
பழகத்தான் சரியாக வரும்.
-ஜான் ரஸ்கின்
9.வேலை செய்யாவிட்டால் நாட்களும் புனிதமாகது, வாழ்க்கையும் புனிதமாகது.
-ஜான் ரஸ்கின்
10.ஆயிரம் வருடம் மௌனமாக
நின்ற மரம் விழும்போது காடே அதிரும்படி செய்துவிடுகிறது. நீ...?
-ஜான் ரஸ்கின்
11.வளமுடன் வாழும்போது நண்பர்கள் உன்னை அறிவர். வறுமையில் நீ நண்பர்களை அறிவாய்.
-ஜான் ரஸ்கின்
12.அனுபவம், அறிவு மற்றும் ஆர்வம் ஆகிய ஒன்றுபட்ட சக்திகளின் செயல்பாடே திறமை
எனப்படுகிறது.
-ஜான் ரஸ்கின்
13.உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளம் பணிவு.
-ஜான் ரஸ்கின்
14.ஒருவன் பணத்தைத் தேடி
பணக்காரன் என்ற பெருமையோடு வாழ விரும்பினால் அது அவனுக்கும் அவன் சந்ததிக்கும் சாபமாகவே முடியும்.
-ஜான் ரஸ்கின்
15.குழந்தைகளை முதலில் மனிதராக்குங்கள்; பிறகு
அவர்களை அறிவாளி ஆக்கலாம்.
-ஜான் ரஸ்கின்
16.கல்வி என்பது ஒருவன்
அறியாத பொருளை அறிய
வைப்பதல்ல; ஒருவனுக்குத் தெரியாத பண்புகளைத் தெரிய வைப்பது.
-ஜான் ரஸ்கின்
17.அன்பு சில குறைகளையும் அறிவு சில பிழைகளையும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் உண்மை
எந்த அவமானத்தையும் மன்னிக்காது. எந்தக்
குறையையும் பொறுக்காது.
-ஜான் ரஸ்கின்
18.நாம் எவ்வளவு செய்யப்போகிறோம் என்பது
முக்கியமல்ல எவ்வாறு செய்யப் போகிறோம் என்பதே முக்கியம். அதிகமாகச் செய்வதைக் காட்டிலும் செய்வதைத் திருந்தச் செய்வதே பெருமை.
-ஜான் ரஸ்கின்
19.குற்றத்தை தடுப்பதற்காக நீதிபதியின் கையிலுள்ள இறுதியான மற்றும் குறைந்த பயனுள்ள கருவியே தண்டனை
என்பது.
-ஜான் ரஸ்கின்
20.முடிந்ததை நினைப்பவன் மனிதன்;
நினைத்ததை முடிப்பவன் இறைவன்.
-ஜான் ரஸ்கின்
21.பணம் வாழ்வின் லட்சியமாகிவிட்டால் அது
தவறான வழியிலேதான் தேடப்படும், செலவழிக்கப்படும். அதைத் தேடும்போதும் செலவு செய்யும்போதும் தீமை பயக்கும்.
-ஜான் ரஸ்கின்
22.அரும்பெரும் செயல்களைச் செய்ததும், செய்யப்போவதும் தன்னம்பிக்கையே.
-ஜான் ரஸ்கின்
ஜான் ரஸ்கின் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
John Ruskin Motivational Quotes in Tamil