நெப்போலியன் ஹில் உற்சாகமூட்டும்
வார்த்தைகள்
Napoleon Hill Motivational Quotes in Tamil
1.உங்களுக்கான மிகப்பெரிய வாய்ப்பானது, நீங்கள் இப்பொழுது எங்கிருக்கீறீர்களோ அங்கேயேகூட இருக்கலாம்.
-நெப்போலியன் ஹில்
2.மனதில் ஒன்றைத் திட்டமிட்டு, அது நடக்கும் , கிடைக்கும் என்று நம்பினால், மனித மனம் எப்பாடுபட்டாவது அதை பெற்றுத் தந்துவிடும்.காரியங்களையும் செய்து முடித்துவிடும்.
-நெப்போலியன் ஹில்
3.என்னிடம் எதை வேண்டுமானாலும் கேள்; ஆனால் நேரத்தை மட்டும் கேட்காதே!
-நெப்போலியன் ஹில்
4.உங்களால் பெரிய விஷயங்களைச் செய்யமுடியவில்லை என்றால், சிறிய விஷயங்களைச் சிறந்த வழியில் செய்து பாருங்கள்.
-நெப்போலியன் ஹில்
5.பயம், அச்சம் இரண்டுக்கும் பதிலாக வெற்றி மகிழ்ச்சி இரண்டையும் சிந்திக்கப் பழகுங்கள்.
-நெப்போலியன் ஹில்
6.பேசுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளுங்கள், ஏனென்றால் உங்கள் வார்த்தைகள் மற்றொருவரின் மனதில் வெற்றி அல்லது தோல்விக்கான விதையை விதைக்கக்கூடும்.
-நெப்போலியன் ஹில்
7.இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல, கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.
-நெப்போலியன் ஹில்
8.நல்ல காரியங்களைச் செய்ய ஒரு போதும் பயப்படாதீர்கள். தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்.
-நெப்போலியன் ஹில்
9.ஆழ்மனம் என்பது ஒரு செழிப்பான தோட்டத்தைப் போன்றது. நீங்கள் விரும்பும் பயிர்களை அத்தோட்டத்தில் நீங்கள் பயிரிடாவிட்டால், அதில் களைகள்தான் முளைக்கும்.
-நெப்போலியன் ஹில்
10.வெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள். தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை அடிக்கடியும், மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள்.
-நெப்போலியன் ஹில்
11.நெஞ்சிலே பாய வரும் ஆயிரம் ஈட்டிகளுக்கு நான் அஞ்சுவதில்லை. ஆனால் ஓர் அறிஞரின் பேனா முனைக்குப் பயப்படுகிறேன்.
-நெப்போலியன் ஹில்
12.போரிலே கூட புற ஆற்றலினும் மன ஆற்றல் மூன்று மடங்காகும்.
-நெப்போலியன் ஹில்
13.உழைப்பு என்றும் வீண்போகாது. உழைப்பிற்குத் தகுந்த பலன் ஒருநாள் கட்டாயம் கிடைக்கும்.
-நெப்போலியன் ஹில்
14.கடமையைச் செய்யும்போது மகிழ்ச்சியாகச் செய்யவில்லையென்றால், அதன் முடிவும் மகிழ்ச்சியாக இருக்காது.
-நெப்போலியன் ஹில்
15.நாளை நாளை என ஒரு காரியத்தை தள்ளிப்போடுவது வெற்றியை தள்ளி வைப்பது போலாகும்.
-நெப்போலியன் ஹில்
16.நமது குறிக்கோள் என்பது காலக்கெடு கொண்ட கனவு தான்.
-நெப்போலியன் ஹில்
17.சாதனைகளுக்கான முதல் படி தீவிரமான ஆழ்ந்த ஆசைதான்.
-நெப்போலியன் ஹில்
18.அவரவர் வீழ்ச்சிக்கு அவர்களேதான் காரணமாக இருக்க முடியும்.
-நெப்போலியன் ஹில்
19.குழந்தையின் எதிர்காலம் எப்போதும் தாயின் செயலில் அடங்கி இருக்கிறது.
-நெப்போலியன் ஹில்
20.வாழ்வின் போராட்டங்களை எப்போதும் வலிமையானவர்கள் வெல்வதில்லை. தன்னால் வெற்றி பெற முடியும் என்று நினைக்கும் ஒருவன்தான் இறுதியில் வெற்றி பெறுகிறான்.
-நெப்போலியன் ஹில்
21.லட்சியத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ள கூடாது. அதை அடைவதற்கான வழிமுறைகளை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம்.
-நெப்போலியன் ஹில்
22.துன்பம் என் நண்பன் அதை நான் வெறுக்க மாட்டேன். உலகில் அபார சாதனை படைத்தவர்களுக்கு துன்பம் தான் தோழன்.
-நெப்போலியன் ஹில்
23.எதிரி தன்னை வென்றுவிடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய் தோல்வி அடைவான்.
-நெப்போலியன் ஹில்
24.எதற்காகவும் காத்திருக்க வேண்டாம், இந்த நிமிடமே சரியான நேரம்.
-நெப்போலியன் ஹில்
நெப்போலியன் ஹில் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Napoleon Hill Motivational Quotes in Tamil