கார்ல் மார்க்ஸ் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Karl Marx Motivational Quotes in Tamil
கார்ல் மார்க்ஸ் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Karl Marx Motivational Quotes in Tamil
1.ஒருவன் தனக்காக, தன்
வாழ்க்கைக்காக உழைக்கும்போது மனிதனாகிறான். ஒரு சமூகத்திற்காக, மக்களுக்காக வாழும்போதுதான் அவன் உண்மையான மனிதனாகிறான்.
-கார்ல் மார்க்ஸ்
2.மனிதன் தன்னுடைய சகமனிதனின் உயர்வுக்காகவும், நன்மைக்காகவும் பாடுபடுவதன் மூலமே
அவன் தன்னை உயர்த்திக் கொள்கிறான்.
-கார்ல் மார்க்ஸ்
3.நாம் வீணாகக் கழிக்கும் ஒவ்வொரு வினாடியும் நமது
வாழ்வில் மீண்டும் நாம்
பெற முடியாத பெருஞ்
செல்வமாகும்.
-கார்ல் மார்க்ஸ்
4.உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம்.
-கார்ல் மார்க்ஸ்
5.ஒரு மனிதன் தனக்காக மட்டும் உழைத்தால், அவன்
ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, மாபெரும் ஞானியாகவோ, தலைசிறந்த கவிஞனாகவோ ஆகக் கூடும்,
ஆனால் அவனால் என்றுமே உண்மையிலேயே நிறைவான, மகத்தான மனிதனாக ஆக முடியாது.
-கார்ல் மார்க்ஸ்
6.தொழிலாளர்களின் திறமையான உழைப்பிலேயே தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி இருக்கிறது.
-கார்ல் மார்க்ஸ்
7.பொது நன்மைக்காகப் பாடுபடுவதன் மூலம்
தங்களைச் சிறப்பித்துக் கொள்ளும் மனிதர்களைத்தான் வரலாறு
மிக உயர்ந்த மனிதர்கள் என்று அடையாளம் காட்டுகிறது.
-கார்ல் மார்க்ஸ்
8.உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும்.
-கார்ல் மார்க்ஸ்
9.தாயின் கோபம் பூமேல்
பனி மாதிரி.
-கார்ல் மார்க்ஸ்
10.அன்பு நிறைந்த பெண்ணிடம் காதல் கொள்வது என்பது
ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது.
-கார்ல் மார்க்ஸ்
11.ஆழ்ந்து சிந்தித்தபின் முடிவெடுப்பவனே வெற்றிகரமான மனிதனாக விளங்கமுடியும்
-கார்ல் மார்க்ஸ்
12.மக்களை மகிழ்ச்சியடையச் செய்யும் மனிதன்தான் மகிழ்ச்சிகரமான மனிதன் என்று
வரலாறு வரவேற்கிறது.
-கார்ல் மார்க்ஸ்
13.என்றும் நினைவில் கொள்.
மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது
-கார்ல் மார்க்ஸ்
14.உழைப்புதான் எல்லாச் செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம்.
-கார்ல் மார்க்ஸ்
15.ஐரோப்பாவில் அறுவடை நல்ல
அல்லது கெட்ட பருவ
நிலையைப் பொறுத்திருப்பதைப் போல, ஆசியாவில் அது நல்ல அல்லது
கெட்ட அரசாங்கங்களைப் பொறுத்திருக்கிறது.
-கார்ல் மார்க்ஸ்
16.நீதிமன்றம் சந்திக்க வேண்டிய இன்னொரு நீதிமன்றம் மக்கள்
கருத்து.
-கார்ல் மார்க்ஸ்
17.தத்துவ ஞானிகள் உலகத்தை இதுவரை பல்வேறு வழிகளில் விளக்கியுள்ளனர். ஆனால், அதை
மாற்ற வேண்டியதுதான் இப்போதுள்ள கடைமை.
-கார்ல் மார்க்ஸ்
18.சகலவிதமான அடிமைத்தனத்தையும் ஒழிக்காமல் மனித
விடுதலை சாத்தியமாகாது.
-கார்ல் மார்க்ஸ்
19.நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது.
-கார்ல் மார்க்ஸ்
20.காலம் மனித வளர்ச்சி நடைபெறுவதற்கான வெளி.
-கார்ல் மார்க்ஸ்