நபிகள் நாயகம் வார்த்தைகள் | Nabikal naayagam Motivational Quotes in Tamil
.செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.
2.இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.
3.உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.
4.உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.
5.இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்
6.கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.
7.பதுக்கல் செய்பவன் பாவியாவான்.
8.பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
9.தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும்.
10.தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.
11.நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது.
12.இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.
13.குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.
14.எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை.
15.புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.
16.நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.
17.மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.
18.இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.
20.ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.
21.தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.
22.ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும்
23.மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.