நேதாஜி உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Netaji Motivational
Quotes in Tamil
1.உயர்ந்த சிந்தனைகளின் வழியாகவும் சளையாத உழைப்பினாலும், பயனற்றுப் போகும் வாழ்க்கையை, அழியாத ஒரு இலட்சியத்திற்கு தாய் நாட்டின் விடுதலைக்காக ஈடுபட செய்ய வேண்டும். அதுவே நம் வாழ்க்கையை அர்த்தமுடையதாக்கும்.
-நேதாஜி
2.சரித்திரம் மகா சக்தி
பெற்றது. அதில் பதிவாகும் ஒவ்வொரு மகத்தான மாற்றமும் அத்தனை எளிதானது அல்ல.
-நேதாஜி
3.இறைவன் நமக்கு செல்வத்தை கொடுக்க வில்லையே என்று
கவலைப்படாதே. நமக்கு உயிர்
எனும் பெரிய செல்வத்தை கொடுத்திருக்கிறான். அதனைக் கொண்டு
எதையும் சாதிக்கலாம்.
-நேதாஜி
4.எந்தச் செயலும் செய்யாமல் பயனற்றுக் கிடக்கும் மனிதர்கள் உயிரற்றவர்கள். அவர்கள் வெறும்
புழுப் பூச்சிகளை போன்று
இந்த உலகத்தில் இருப்பார்கள் சரித்திரத்தில் இடம் பெற
மாட்டார்கள்.
-நேதாஜி
5.முதலில் தன்னை மாற்றிக்கொள்ள தயாராக இருப்பவனே உலகை
மாற்றத் தகுதியுடையவன்.
-நேதாஜி
6.சாதிக்க முடியாததைக் கூட
சாதிக்க முடியும். தன்னம்பிக்கை எனும் மனோ சக்தியால்.
-நேதாஜி
7.எந்த ஒரு சமுதாயம் தன் சுற்றத்தை விட்டு
பிற நாட்டுடன் கூட்டுறவு வைத்துக் கொள்ள பயப்படுகிறதோ அதன் வீழ்ச்சி எதிர்பார்க்கக் கூடியதே.
-நேதாஜி
8.தலைவனை தேட முடியாமல் போனாலும் போகட்டும் அதற்காக நீங்கள் உங்களுடைய காரியத்தை நிறுத்தாதீர்கள். நாளடைவில் நீங்களே தலைவனாக வந்துவிட முடியும்.
-நேதாஜி
9.உண்மையான நண்பனாக இரு
- அல்லது உண்மையான பகைவனாக இரு. துரோகியாகவோ பாதி நம்பிக்கை உடையவனாகவோ இருக்காதே!
-நேதாஜி
10.ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுக்காது போனால் அரை நிமிஷங்கூட நாம் இவ்வுலகில் வாழ்வை
நடத்த முடியாது. இந்த
மனித சமூகம் அத்தகையதோர் ஒற்றுமை இராவிட்டால் கட்டாயம் அழிந்தேவிடும்.
-நேதாஜி
நேதாஜி உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Netaji Motivational Quotes in Tamil