Type Here to Get Search Results !

சிக்கனம் பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Provident quotes in Tamil


சிக்கனம் பற்றிய தமிழ் சிந்தனை வரிகள்   | Provident quotes in  Tamil

சிக்கனம் பற்றிய தமிழ் சிந்தனை வரிகள்


1.ஆடம்பர செலவு என்பது தரித்திரத்தை விலை கொடுத்து வாங்குவதாகும்.


-தந்தை பெரியார்


2.வரவுக்கு மேல் செலவு செய்வது விபச்சாரத்தனம் செய்வதைப் போன்றதாகும்.

-தந்தை பெரியார்


3.சம்பாதிப்பவனைவிட சேமிப்பவனே சிறந்தவன்.


-ஜான் டிரைடன்


4.சேமிப்பை அலட்சியப்படுதுகிறவன் தன் வாழ்வில் ஒரு நாளும் வளமையைக் கொண்டு வர முடியாது.

-ஆபிரகாம் லிங்கன்


5.சிக்கனமாக வாழும் ஏழை, சீக்கிரம் செல்வந்தனாவான்.

-செனேகா


6.நல்ல குடும்பம் என்பது வரவுக்கு மிஞ்சிச் செலவு செய்யாமல் இருப்பதாகும்.

-தந்தை பெரியார்



7.சிக்கனமே செல்வம், தகுதிக்கு மேல் வாழ்வதே தரித்திரம் என்பதை மனத்தில் இருத்தல் வேண்டும்.


-தந்தை பெரியார்



8.செல்வாக்கு நீடித்திருக்க வேண்டுமானால் செல்வத்தைப்போலவே அதையும் சிக்கனமாகவே செலவு செய்ய வேண்டும்.


-லியோ டால்ஸ்டாய்


9.செலவழிக்கும் பணத்துக்கு கணக்கு எழுதிவை, செலவழித்தது அவசியம்தானா என்று சிந்தித்துப்பார். சிக்கனம் தானாகவே வந்துவிடம்.


-மகாத்மா காந்தியடிகள்


10.கஞ்சத்தனம் என்பது சிக்கனத்தின் போலியான ஒரு உணர்வு. பொருட்பொறுப்பினால் இயக்குவது சிக்கனம். பொருளாசையால் இயங்குவது கஞ்சத்தனம்.



-பெருஞ்சித்திரனார்


11.சிக்கனமும், சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்.



-ஜார்ஜ் ஹெர்பெர்ட்



12.சிக்கனமாக இல்லாமல் யாரும் செல்வந்தராக முடியாது. சிக்கனமாக இருந்தால் யாரும் வறியவராக முடியாது



-சாமுவேல் ஜான்சன்



13.சிறிய செலவுகளில் கவனமாக இருங்கள், ஒரு சிறு துளையானது எவ்வளவு பெரிய கப்பலையும் மூழ்கடித்துவிடும்.


-பெஞ்சமின் பிராங்க்ளின்


14.செல்வத்துடன் இருக்க வேண்டுமென்றால் சம்பாதிப்பதைப் போல் சேமிப்பதைப் பற்றியும் நினைக்க வேண்டும்.

-பெஞ்சமின் பிராங்க்ளின்


15.சிக்கனம் என்பது கரியை மிச்சப்படுத்துவதில் அடங்கியதல்ல. அந்தக் கரி எரியும்போது காலத்தைச் சிக்கனமாக உபயோகப்படுத்துவதில்தான் அடங்கியுள்ளது.


-எமேர்சன்


16.வளத்தின் ஒரு கை உழைப்பு. ஒரு கை சிக்கனம்.

-சாமுவேல் ஜான்சன்


17.வாழ்க்கை ஒரு போர்க்களம்; அதில் சிக்கனமாக இருத்தல் என்பது பாதி வெற்றிக்குச் சமம்

-கதே

சிக்கனம் பற்றிய தமிழ் சிந்தனை வரிகள்   | Provident quotes in  Tamil


ProvidentquotesinTamil1

ProvidentquotesinTamil2

ProvidentquotesinTamil3

ProvidentquotesinTamil4

ProvidentquotesinTamil5

ProvidentquotesinTamil6

ProvidentquotesinTamil7

ProvidentquotesinTamil8

ProvidentquotesinTamil9

ProvidentquotesinTamil10

ProvidentquotesinTamil11

ProvidentquotesinTamil12

ProvidentquotesinTamil13

ProvidentquotesinTamil14

ProvidentquotesinTamil15

ProvidentquotesinTamil16

ProvidentquotesinTamil17


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content