Tamil quotes about jealous
பொறாமை
பற்றிய தமிழ் சிந்தனை வரிகள்
1.பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை
வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்ப வந்து சேர்ந்துவிடும்..!
2. அடுத்தவனுக்கு கிடைத்துவிட்டது என்று சக
மனிதன் பொறாமை படாத ஒரே விஷயம் மரணம் மட்டுமே..
3. வாழ்ந்து உயர்ந்துவிட்டால் பொறாமையில் பேசுவார்கள்.
தாழ்ந்து வீழ்ந்து விட்டால் கேவலமாக பேசுவார்கள். இவ்வளுவுதான் மனிதர்களின் உலகம்..!
4. நம்மகிட்ட பல்சர் வண்டி இல்லையேனு வருத்தப்படுறத
விட அல்சர் வராத வயிறு இருக்கேனு சந்தோஷபட்டுக்கனும்..
5. நீ அடுத்தவனை அழிக்க நினைத்தால் உன்னை அழிக்க
ஒருவன் வந்து கொண்டிருப்பான்..
6. கோபமும், பொறாமையும் மனிதனை கொன்றுவிடும்
சக்தி படைத்தது..
7. தான் நேசிக்கப்படவில்லை என்று நினைக்கிறவர்களே
பொறாமையாளர்களாக மாறுகிறார்கள்.
8. ஒவ்வொரு அறிவுரைக்குப் பின்னும் ஓர் அர்த்தம்
உள்ளது. அது அக்கறை அல்லது பொறாமை.
9. பொறுமை கொண்டவன் வாழ்வில் சிறப்பான். பொறாமை
கொண்டவன் வாழ்வையே இழப்பான்.
10. நெருப்பு விறகைத் தின்பது போல கபடமும்,
பொறாமையும் நன்மைகளைத் தின்றுவிடும்.
11. ஜப்பான்காரன் வேலை செய்யலைன்னா செத்துடுவான்.
சீனாக்காரன் சூதாடாம இருந்த செத்துடுவான். நம்ம சொந்தக்காரன் நம்ம சந்தோஷமா இருந்தா
செத்துடுவான்.
12. கூட படிச்சவன் நம்மளவிட அதிக மார்க் எடுத்தப்ப
கூட வராத பீலீங்ஸ் நம்மளவிட சீக்கிரம் கல்யாணம் பண்றப்போ வந்து தொலையுது.
13. மத்தவங்க பொறாமை படுற அளவுக்கு வாழணும்னு
அவசியம் இல்லை.. பெத்தவங்க பெருமை படுற அளவுக்கு வாழ்ந்தாலே போதும்.
14. அடுத்த நொடி நமக்கு சொந்தமில்லாத போது நீயா
நானா என்ற போட்டி பொறாமைகள் எதற்கு...
15. உன்னை யார் விமர்சித்தாலும் கவலைகொள்ளாதே..
ஏனென்றால் உன்னை விமர்சிப்பவனை நீ பொறாமை பட வைத்திருக்கிறாய் என்று அர்த்தம்.