விழி பார்த்துபேசு | தமிழ் SMS காதல் கவிதைகள் - 07 | Tamil SMS Love Quotes
61.உன் நெஞ்சத்தின்
பஞ்சணையில்...
என் கவலைகளும்
உறங்கிவிடும்
62.என்ன மாயம் செய்தாய்
உனக்கெழுதும் வரிகளெல்லாம்
மாயமாக மறைகிறதே
63.நீயில்லா நேரம்
நினைவுகள் பாரம்
64.ஆயுளின் காலம்
எதுவரையென்று
தெரியாது ....
ஆனால் உனதன்பிருக்கும்வரை
என் ஆயுளிருக்கும்...
65.விழி பார்த்து
பேசு என்கிறாய்
உன் விழி நோக்க
மொழிகளும்
மறந்து போகிறது...
66.காத்திருந்து
களைத்துவிட்டது
கண்கள்
கனவிலாவது
கலந்துக்கொள்
67.தனிமையை
நேசிக்கின்றேன்
உன் நினைவுகளுக்காக...
68.நீ வெட்கித்தலை குனிந்து
கொலுசுமாட்டும் அழகில்
நான் சொக்கித்தான்
போகின்றேன்...
69.சலிக்காத ரசணைகள்
தூரத்து நிலவும்
அருகில் நீயும்...!
70.உன்
அருகாமை போதும்
தாய்மடியாய்
நினைத்து நானுறங்க