தனிமையின்இடைவெளியை | தமிழ் SMS காதல் கவிதைகள் - 08 | Tamil SMS Love Quotes
71.விடிந்தபின்னும் உறங்கிகிடக்குறேன்
விழிமூடாமல் உன் நினைவில்...
72.எனையறியாமல்
உறங்கிப்போனேன்
உனதன்பில்...
73.தனிமையின்
இடைவெளியை
நிரப்புகின்றது
உன் .....
நினைவுகள்...
74.அடிக்கடி நினைக்க வைத்து
கன்னத்தை நனைத்துச்
செல்கிறாய்...
75.காற்றோடு வந்த காதல் மொழியில்
நான் காத்தாடியானேன்...
76.வாடிய மனம் வானவில்லானது
உன் வருகையை கேட்டு...
77.மொழியில்
சொல்லத்தயங்கும்
ஆசைகளையெல்லாம்
விழியில்
கொட்டித்தீர்க்குறேன்...
78.என்னைவிட நம் காதலை பாதுகாத்தது
நீ நான் தவறவிட்டபோதெல்லாம்
தாங்கி பிடித்தாய்...
79.இரவும்
கடந்துக்கொண்டிருக்க...
உன் நினைவுகள்
உரசிக்கொண்டிருக்க....
என் உறக்கமும்
தொலைந்துக்கொண்டிருக்கு
80.நீ பொழியும்
அன்பின்
அருவியைவிடவா
இந்த
மலையருவி என்னை
மகிழ்விக்கபோகிறது...