சிந்தனை பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Thought quotes in Tamil
1.உயர்ந்த சிந்தனைகளின் வழியாகவும் சளையாத உழைப்பினாலும், பயனற்றுப் போகும் வாழ்க்கையை, அழியாத ஒரு இலட்சியத்திற்கு தாய் நாட்டின் விடுதலைக்காக ஈடுபட செய்ய வேண்டும். அதுவே நம் வாழ்க்கையை அர்த்தமுடையதாக்கும்.
-நேதாஜி
2.தனி மனிதனின் தனி உரிமையான சிந்தனையால் சாதிக்க முடியாதது என்று எதுவுமில்லை.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
3.சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் நடவடிக்கைக்கான நேரம் வரும்போது சிந்தனையை நிறுத்திவிடுங்கள்.
-நெப்போலியன் பொனபார்ட்
4.புதிய யோசனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிரமத்தை விட பழைய யோசனைகளில் இருந்து வெளியே வருவதில் இருக்கும் சிரமமே அதிகம்.
-ஜான் மேனார்ட் கீன்ஸ்
5.தூய்மையான சிந்தனைகளும் செயல்களும் ஒருவனைத்தொடர்ந்து வரும், நிழலை போல என்றும் ஆனந்தத்தைத் தரும்.
-கௌதம புத்தர்
6.உயிரினங்களில் மனிதனே சிறந்தவன், அவனது சிந்தனைத் திறன்தான் அந்த 'சிறப்பினை' அவனுக்கு அளிக்கின்றது.
-அரிஸ்டாடில்
7.சிந்திப்பவன் மனிதன், சிந்திக்க மறுப்பவன் மதவாதி; சிந்திக்காதவன் மிருகம்; சிந்திக்க பயப்படுகிறவன் கோழை.
-தந்தை பெரியார்
8.சிந்தனை சந்தேகத்தை வளர்க்கிறது. சந்தேகம் ஆராய்ச்சியை வளர்க்கிறது. ஆராய்ச்சி உண்மையை வளர்க்கிறது. உண்மை எல்லா மூட நம்பிக்கைகளையும் அழிக்கிறது.
-இங்கர்சால்
9.ஒரே ஒரு முறை நடந்தால் அது தடமாக மாறாது. அதே போல் ஒரு விஷயத்தை ஒரே ஒரு முறை சிந்திப்பதன் மூலம் நமக்கு சரியான யோசனை கிடைக்காது.
-ஹென்றி டேவிட் தொரேயு
10.சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.
-அப்துல் கலாம்
11.ஆழ்ந்து சிந்தித்தபின் முடிவெடுப்பவனே வெற்றிகரமான மனிதனாக விளங்கமுடியும்
-கார்ல் மார்க்ஸ்
12.படிப்பு, படிப்பு என்று பலரும் படித்துக் கொண்டே இருக்கிறார்கள் சிலர் நமது சிந்தனை சக்தியை இழப்பது வரை படிக்கிறார்கள். படிப்பதை நிறுத்திவிட்டு முதலில் படித்ததைப் பற்றி சிந்தியுங்கள்.
-மகாத்மா காந்தியடிகள்
13.சிந்தனைதான் அறிவை வளர்க்கும்; அறிவுதான் மனித வாழ்வை உயர்த்தும்.
-தந்தை பெரியார்
14.சுயமாக சிந்தனை செய்யாத மனிதன் அடிமை, அவன் தனக்கு மட்டும் துரோகியல்ல மற்றவர்களுக்கும் துரோகியாகின்றன.
-இங்கர்சால்
15.மற்றொரு சிந்தனையை தேர்வு செய்துகொள்வதற்கான நமது திறனே, மன அழுத்தத்திற்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம்.
-வில்லியம் ஜேம்ஸ்
16.சிந்திப்பதும், தனது சிந்தனையில் தோன்றியதைச் சொல்வதும் தனிமனிதனின் பிறப்புரிமை, அதனைத் தடுக்கவோ தட்டிக் கேட்கவோ எவருக்கும் உரிமையில்லை. மனிதன் தடையின்றிச் சிந்திக்கிற நாட்டில்தான் உண்மையான மக்களாட்சி மலரும்.
-சாக்ரட்டீஸ்
17.சிந்திப்பது என்பது மிகவும் கடினமான வேலை. அதனாலேயேதான், மிகச்சிலரே அந்த வேலையைச் செய்கின்றனர்.
-ஹென்றி ஃபோர்டு
18.சிந்தனை எளிதானது, செயல்பாடு கடினமானது; ஒருவரது எண்ணத்தை செயல்பாடாக மாற்றுவது உலகிலேயே மிக கடினமான விஷயம்.
-கதே
19.நான் சமுதாயத்திற்கு என்ன நன்மையைச் செய்திருந்தாலும் அது என் சிந்தனையையே சாரும்.
-ஐசக் நியூட்டன்
20.மறுசிந்தனையே சிறந்த சிந்தனை.
-எமேர்சன்
21.கீழ்த்தரமான சிந்தனைகளை எந்தச் சூழ்நிலையிலும் நினைக்க வேண்டாம்.
-கன்பூசியஸ்
22.ஒருவருக்கு தீவிரமாக சிந்திக்கக் கற்றுக்கொடுப்பதே கல்வியின் செயல்பாடு.
-மார்டின் லூதர் கிங்
23.படிப்பு வெறும் தீக்குச்சியைப் போன்றது, எந்தப் பிரச்சனையோடாவது உராயும்போதுதான் அதிலிருந்து சிந்தனை சுடர் ஏற்படுகிறது
-சுவாமி விவேகானந்தர்
24.செயலில்லாத சிந்தனை அழிவைத் தரும். சிந்திக்காது புரிகின்ற செயல் அர்த்தமற்றது, எனவே சிந்தனையும் செயலும் ஒன்றுபடும் முயற்சி வேண்டும்.
-ஜவகர்லால் நேரு
25.ஒரு மனிதனை உயர்த்துவது அவனுடைய சிந்தனைதான்.
-ஜீன் ஜாக்ஸ் ரூஸோ
26.நாம் மிக அதிகளவு சிந்திக்கிறோம். ஆனால், மிகமிகக் குறைவான அளவுக்கே அக்கறைகொள்கிறோம்.
-சார்லி சாப்ளின்
27.செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
-சுவாமி விவேகானந்தர்
28.ஒரு மணி நேர பேச்சை விட ஒரு நிமிட சிந்தனை மேலானது.
-ஜான் சி மேக்ஸ்வெல்
29.மனிதனாகப் பிறந்தவன் கட்டாயமாகச் சிந்திக்க வேண்டும். சிந்திக்கச் சிந்திக்க மனிதனின் எண்ணங்கள் உருப்பெற்றுச் சிறப்படையும் சிந்திப்பது மனிதனுடைய தனி உரிமை சிந்திக்கத் தெரிந்தவனே மனிதன் அறிவாளி.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
30.கடுகளவு சிறந்த சிந்தனை பூசணியளவு நற்பயனைத் தரும்.
-கிருபானந்த வாரியார்
31.நீங்கள் வெற்றி பெறுவதற்கு உங்களுக்குத் தேவைபடுவதெல்லாம் ஓர் அபாரமான யோசனை மட்டுமே.