தொல்லைகள்செய்யாமல் | தமிழ் SMS காதல் கவிதைகள் - 09 | Tamil SMS Love Quotes
81.தயக்கமின்றி மனதுக்குள் நுழைந்து விட்டாய்
வார்த்தைகள் தான் உன்னெதிரே தயங்கி தவிக்கிறது...
82.உன்
நினைவுத்...
தென்றலில்
நானுமோர்
ஊஞ்சலாகின்றேன்
83.ஆசைகள் கடலாய்
பொங்க......
வெட்கங்கள் அலையில்
அடித்துச்செல்ல......
அச்சங்கள் கரையொதுங்க
முத்தங்களும் தொடர்ந்தது.....
84.புயலைவிட
வேகமாக
தாக்குகிறது
உன் பார்வை.....
கொஞ்சம்
தாழ்த்திக்கொள்
நான்
நிலையாக
நிற்க....
85.தொல்லைகள்
செய்யாமல்
தொலைவாகவே
தொடர்ந்து
என்னை
உன்னில்
தொலைக்க
செய்தாய்.
86.விழிகள் அடிக்கடி
மோதிக்கொள்ள
இதயங்கள் ஒன்றானது...
87.நிசப்தமான இரவில்
உன் நினைவுமோர்
அழகிய கவிதை...
88.விழித்துக்கொண்ட நினைவுகள்
உறங்கும் போது விடியலும் வந்துவிடுகிறது...
89.பிடிவாதத்தில்
ஜெயிப்பதைவிட
உன் அன்பிடம்
தோற்பதையே
விரும்புகிறேன்.
90.தனிமையை
இனிமையாக்க
உன்
நினைவுகளால்
மட்டுமே முடியும்...