தழுவிச் செல்லும் | தமிழ் SMS காதல் கவிதைகள் - 06 | Tamil SMS Love Quotes
51.காதல் சிலருக்கு
கண்ணீரின் காவியம்
பலருக்கு அழகிய ஓவியம்
52.கடலில்
விழுந்த
நீர்துளிப்போல்
உன்னில்
கலந்துவிட்டேன்
53.கட்டிலறையோடு முடிவதல்ல காதல்
கல்லறைவரை தொடர்வதே காதல்
54.ஆசை
ஊற்றெடுக்கும்
போதெல்லாம்
அணைபோடுகிறது
நாணம்.......
55.தழுவிச் செல்லும்
காற்றிலும் உன்
நினைவுகளே
கூந்தலை
கலைத்துச் செல்கையில்...
56.புரிந்துக்கொள்ளும் வரை
எதையும் ரசிக்கவில்லை
புரிந்துக்கொண்டபின்
உன்னை தவிர எதையும்
ரசிக்கமுடியவில்லை...
57.அகிம்சையாக உள்ளே நுழையும்
சில நினைவுகள்
வெளியேறும் போது
போர்க்களமாக்கிவிட்டு
செல்கிறது மனதை...
58.ஆரவாரமின்றி அமைதியாகவே கடந்துச்செல்கிறாய்
என் விழிகள் தான்
ஏனோ உன் வழியை தொடர்கிறது...
59.மனதிலுள்ள
ஆசையெல்லாம்
நீ பார்க்கும் போது
நாணத்தில்
மறைந்துக்கொ(ல்) ள்கிறது
விழிகளை மூடிக்கொள்
என்னாசைகளை நிறைவேற்ற
60.அன்பெனும்
மாளிகையில்
அழியாத
பொக்கிஷம்
நம் அழகிய
நிகழ்வுகள்