கண்ணீரும் கனமானது | தமிழ் SMS காதல் கவிதைகள் - 12 | Tamil SMS Love Quotes
111.பிரிந்திருந்த
நாட்களில் தான்
நம் காதல்......
விருட்சமாக
வளர்ந்திருக்கின்றது
என உணர்ந்தோம்
நாம் சேர்ந்தபோது
112.தீட்டிய
கத்தியைவிட
தீண்டும் உன்
பார்வை
கூர்மையாகவே
தாக்குகின்றது
113.கொட்டும் மழை
கொண்டுவந்து
சேர்த்தது.....
மறந்துப்போன
மழைக்கால
நிகழ்வுகளை
114.கண்ணீரும்
கனமானது
உன்னால்
வந்தபோது
115.இரவின் பிடியில் சிறைப்பட்டிருக்கும்
நிலவைப்போல் உன் நினைவின் பிடியில் நான்...
116.பாசம் காட்ட
பல உறவுகள்
இருந்தாலும்.....
மனம்
களைப்பாகும் போது
இளைப்பாற தேடுவது
உன்னையே
117.தேய்பிறை நிலவுக்கு தான்
உன் நினைவுக்கு அல்ல...
118.உனக்காகவே என் வாழ்க்கை என்று
நீ சொன்னபோது தான்
என்னை எனக்கே பிடித்தது...
119.உனக்காக
காத்திருக்கும்
ஒவ்வொரு
நிமிடமும்
உணர்த்துகிறது
நீயில்லாத வாழ்க்கை
வெறுமை என்று...
120.உன்னருகில்
மௌனமும்
ஓர் அழகிய கவிதை தான்...