உன் தேடல் நானென்றால் | தமிழ் SMS காதல் கவிதைகள் - 14 | Tamil SMS Love Quotes
131.மரணத்தை கொடுத்துவிடு
ஒரு நொடி வலி
மௌனத்தை கொடுக்காதே
ஒவ்வொரு நொடியும் மரண வலி
132.பார்வையில் மனதை
பறித்துச்சென்றாய் நான் சிறகிழந்த பறவையானேன்...
133.சுழற்றியடிக்கும்
காற்றையும் எதிர்த்து
சுடர்விட்டெரிகிறது
அகல்விளக்கு....
பல ஆசைகளுடன்
என்னைப்போலவே
உன்னை வரவேற்க
134.அன்பு காட்டுவதில்
ஜெயிப்பது நீயென்றால்
உன்னிடம் தோற்பதும்
எனக்கு வெற்றியே...
135.இளகாத
உன் மனதால்
மெழுகாக
நானுருகி
வரிகள் பல
வடிக்கின்றேன்
கற்பனையில்
காதல் செய்து
136.உன் தேடல் நானென்றால்
தொலைவதும்
ஒரு சுகமே
137.மயக்கும்
மல்லிகையை
கையில்கொடுத்து
மனதில்.....
அணையா
ஆசையை
மூட்டிச்சென்றான்
138.விழிகளை
திறந்தால்
நாணம்
தடைபோடுமென்று
விழிமூடி கொள்கிறேன்
உன் இதழோடு பேச
139.உன்
விழிகளை நோக்கும் போது
கண்களுக்குள் என்னை
காண்பதைபோல்.....உன்
மனதிலும் நானேயிருப்பேன்
என்ற எண்ணமே
நம் வாழ்க்கையை
அழகாக்குகின்றது
140.மரக்கிளையில்
சாய்ந்தேன்
உன்
நினைவுகள்
துளிர்விட்டது