மனமின்றி விடைகொடுத்தாய் | தமிழ் SMS காதல் கவிதைகள் - 13 | Tamil SMS Love Quotes
121.உன்
விரலிட்ட
பொட்டு
வட்ட
நிலவாக
நானுமோர்
பௌர்ணமியானேன்...
122.மனதுக்குள்
ரசித்தாலும்
மயங்கிப்போகிறேன்
விழிகளுக்குள்
உன்....
பிம்பம்
வந்துநிற்க
123.ரசிக்க
காத்திருந்தபோது...நீ
இசைக்கவில்லை....
இன்று இசைக்க
காத்திருக்கின்றாய்
ரசிக்கும்
மனநிலையில்
நானில்லை
124.மனமின்றி
விடைகொடுத்தாய்
மரணித்தே
விடைபெற்றேன்
125.புகையும்
உன்
நினைவில்
புதைந்து
கொண்டிருக்கின்றேன்
126.உணர்வற்ற கவிதைக்கும்
உயிர் வருகிறது
நீ ரசிக்கும் போது
127.பூ
தலைசாய்ந்தால்
தாங்கிக்கொள்ளும்
கிளையைபோல்
நான்
தலைசாய
நீ வேண்டும்
தாங்கிக்கொள்ள
128.சொல்லாமல் கொள்ளாமல் தழுவிச்செல்லும்
தென்றலைப்போல்
மனதை வருடிச்செல்கிறது
உன் நினைவுகள்
129.மறையும் வரை
திரும்பிவிடாதே
என்னுயிர்
வந்துவிடும்
உன்னுடன்
130.எழுதவில்லை
செதுக்குகிறேன்
உனக்கான கவிதையை
என் இதயத்தில்