ஒற்றைவிழியில் | தமிழ் SMS காதல் கவிதைகள் - 15 | Tamil SMS Love Quotes
141.வரிகளில்லா
அழகிய கவிதை
உன் விழிகளில் ரசித்தேன்...
142.அங்கே உன்
நிலையென்ன....என்ற
நினைப்பிலேயே
என் நிமிடங்கள்
நகர்ந்துக்கொண்டிருக்கு
143.உன்
தொடரலே
என்
உலகத்தை
அழகாக்குகின்றது
144.பூவுக்குள்ளும்
பூத்திருக்கின்றது
உன்
காதல்
வாசனை
145.வேள்வியின்றி
எரிகின்றேன்
உன் விழித்
தீயில்
146.நம்
வாழ்க்கையை
வண்ணமாக்க....
உன்
கையை
தூரிகையாக்கினாய்
147.ஒற்றை
விழியில்
நோக்கினாலும்
எங்கும் நீயே
என்
இருவிழிகளாய்
148.நீ
தாமதிக்கும்
ஒவ்வொரு
நொடியும்
கடிகாரமுள்ளைவிட
அதிவேகமாகவே
துடிக்கின்றது
என்
இதயம்
149.நீ
பொய்யாக
வர்ணிக்கும்
போதெல்லாம்.....
நாணம்
என்னை
மெய்யாகவே
அழகாக்குகின்றது
150.என்னைப்பற்றிய
கவலைகள்
எனக்கில்லை
அக்கறைக்கொள்ள
நீயிருப்பதால்......