முடியாத பயணம் | தமிழ் SMS காதல் கவிதைகள் - 17 | Tamil SMS Love Quotes
161.நாணலும்
நாணம் கொண்டு
தலைசாய்ந்தது
உன் காதல்
மொழியில்
162.முழுதாய்
மறைவதற்குள்
நிலவு விழித்துக்கொள்வதென்ன
உன் நினைவு
163.நீ
ரசிக்க
நானும் ஒரு
சிலையானேன்
164.முடியாத பயணம்
நான் தொடர வேண்டும்
உன் கரம் பிடித்து...
165.வெறுமையான
வாழ்க்கையும்
வசந்தகாலமானது
உன்னால்....
166.கடவுளை
அழைத்தேன்
காட்சித் தரவில்லை
என்னவரை
நினைத்தேன்
கண்ணெதிரே
தோன்றினார்
167.மொத்தமாய்
உன்
அன்பு
என்னை
ஆதிக்கம் செய்ய
சுத்தமாய்
மாறிப்போனேன்
நானும்
168.என் பிழைகளை
திருத்தும்
பிழையில்லா
கவிதை ... நீ
169.எரிக்கும் உன்
பார்வைத்தீயில்
உருகும்
மெழுகாய் நான்....
170.தொலைதூரம்
நீ போனால்
உன்னை தேடி
வெகுதூரம் பயணிக்குறது
உள்ளம்..