காதலின் பிடியில் | தமிழ் SMS காதல் கவிதைகள் - 16 | Tamil SMS Love Quotes
151.கடற்கரையில்
கால் பதித்தேன்
உன் நினைவுகளும்
ஒட்டிக்கொண்டது...
152.தனிமையில்
பயணங்கள்
களைத்ததில்லை
துணையாக
உன்
நிழல்
இருப்பதால்...
153.காவலன்
நீயானாய்
கைதி
நானானேன்
154.தள்ளாடிப்
போகின்றேன்.....
தென்றலில்
தள்ளாடும்
கூந்தலைப்போல்
உன்
கரம்
கன்னத்தில்பட
155.விரும்பியே
தொலைகின்றேன்
விலகிவிடாதே...
156.காதலின்
பிடியில்
சிக்கித் தவித்த
மலருக்கும்
ஆசை வந்தது
மரணிக்காமல்
வாழ......
157.நீ எழுதாதபோதும்
பல கவிதைகள்
ரசிக்கின்றேன்
உன் விழிகள்
158.மனதை
மயக்குகின்றாய்
மருதாணி
வாசனையாய்.....
159.என்னை
மௌனமாக்கி
நீ
விழியில்
பேசியே
வென்றுவிடுகிறாய்
160.மின்னலாய்
நீ வர
மழைச்சாரல்
மனதுக்குள்