பேச நினைத்த | தமிழ் SMS காதல் கவிதைகள் - 18 | Tamil SMS Love Quotes
171.காதல் பிடிக்குள்
சிக்கி காற்றும்
திணறுகிறது
கொஞ்சம் இடைவெளிவிடு
பிழைத்துப்போகட்டும்...
172.உன்னருகில்
உன் நினைவில
மட்டுமே
என் மகிழ்ச்சியெல்லாம்...
173.கற்பனையிலிருந்தவன்
கண்ணெதிரே
தோன்றவும்
சொப்பனமோ
என்றெண்ணியது
மனம்...
174.கவிதையெழுத
சிந்தித்தால்
சிந்தைக்குள்
நீ வந்துவிடுகிறாய்
கவிதையாக...
175.பேச நினைத்த
வார்த்தைகளும்
தூரமானது உன்னருகில்
176.இளைப்பாற
இடம் கேட்டேன்
இதயத்தில்
இணைந்து வாழும்
வரம் கொடுத்தான்...
177.குடைக்குள்
இரு இதயங்கள்
நனைகிறது
காதல் மழையில்...
178.பார்த்தநொடியே
கண்களுக்குள்
ஓவியமானாய்
காத்திருக்கு
விழிகளும்
உன்னுடன் சேர்ந்து
காவியம் பாட
179.நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்...
180.துன்பக்கடலில்
தத்தளித்த போது
துடுப்பாயிருந்து
கரை சேர்த்தாய்