என்உறக்கத்தை | தமிழ் SMS காதல் கவிதைகள் - 19 | Tamil SMS Love Quotes
181.மறந்துப்போன
மகிழ்ச்சியை
மறுபடியும்
மலர
வைத்தாய் நீ...
182.விடுவித்து
விடாதே
உன் விழிகளிலிருந்து
ஒளியிழந்திடுமே
என் விழிகளும்...
183.மொத்த
கவலைகளும்
கலைந்துப்போகிறது
உன் நினைவு
தென்றலாய்
தீண்ட
184.மௌனமாக
பேசிட
உன்னிதழ்
மயங்கித்தான்
போனது
என் மனம்...
185.விடுதலையில்லா
சட்டம்
வேண்டும்
உன் காதல்
பிடிக்குள்
அகபட்டுக்கிடக்க...!
186.என்
உறக்கத்தை
இரையாக்கி
கொள்கிறது
உன் நினைவு...!
187.இருவரி
கவிதையொன்று
இணைந்து
எழுதிடுவோம்
இதழ்களிலே
188.விழி
திறக்கும்வரை
காத்திருக்குறான்
வண்ணக்கனவுகளோடு
வண்ணத்துப்பூச்சியாக
வானில் சேர்ந்துப்பறந்து
ரசித்து மகிழ்ந்திட
189.உன்னால்
என் நொடிகள்
ஒவ்வொன்றும்
அழகானதே
190.எனக்கு
பிடித்ததையெல்லாம்
நீ ரசிப்பதால்
உனக்கு
பிடிக்காததையெல்லாம்
நான் தவிர்க்கிறேன்