காற்றோடு கலந்து வரும் | தமிழ் SMS காதல் கவிதைகள் - 20 | Tamil SMS Love Quotes
191.காற்றோடு
கலந்து வரும்
உன் நினைவுச்சாரலில்
நனைகின்றேன்
நானும்...
192.மணலில்
கிறுக்கியதை
அலைவந்து
அழித்தாலும்
நாம் மனதில்
கிறுக்கியது
மரணம்வரை
அழியாது...
193.ஒப்பனைகள்
தேவையில்லை
உன் அன்பே
போதும்
என்னை அழகாக்க...
194.ஓசையின்றி
பேசிடுவோம்
விழிமொழியில்.....
ஒரு முறை
நோக்கிடுயென்
பார்வையை
195.யார்
பாதையையும்
தொடராத விழிகள்
உன் வழியை
தொடருது
196.உன்னிதய
துடிப்போடு
என்பெயரும்
கலந்திட
நம் காதலும்
அழகாக மலர்ந்தது....
197.விடைபெறும்
போதெல்லாம்
பரிசாக்கி
செல்கின்றாய்
அழகிய
தருணங்களை...
198.மனதோடு
நீ
மழையோடு
நான்
நனைகின்றது
நம் காதல்...!
199.அடைமழையில்
தப்பித்து
உன் அனல்
பார்வையில்
சிக்கிக்கொண்டேன்
200.நீ
கவனிக்காமலே
கடந்து
செல்வதால்
உன்மீது காதலும்
வளர்கிறது...!
காற்றோடு கலந்து வரும் | தமிழ் SMS காதல் கவிதைகள் - 20 | Tamil SMS Love Quotes