சாக்ரட்டீஸ் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Socrates Motivational Quotes in Tamil
சாக்ரட்டீஸ் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Socrates Motivational Quotes in Tamil
1.அழகுக்கு ஆயுள் மிகக்
குறைவு.
-சாக்ரட்டீஸ்
2.அற்ப மனமுடையோர் பழிவாங்கும் பண்புடையோர்.
-சாக்ரட்டீஸ்
3.ஆசைகளை அடக்க வேண்டியதில்லை, அதைச் சீரமைப்பதுதான் முக்கியம்.
-சாக்ரட்டீஸ்
4.ஆடம்பரம் என்பது போலியான வறுமை, மனநிறைவு என்பது
வற்றாத செல்வம்.
-சாக்ரட்டீஸ்
5.பைத்தியக்காரனை நிச்சயம் திருத்தி விடலாம்; தற்பெருமை பேசுபவனை மட்டும் திருத்தவே முடியாது.
-சாக்ரட்டீஸ்
6.உங்கள் பேச்சைக் கொண்டுதான் உங்கள் அன்பு மதிக்கப்படும். உங்கள் அன்பைப் போலத்தான் உங்கள் நடத்தை இருக்கும். உங்கள் நடத்தையைப் போலத்தான் இருக்கும் உங்கள் வாழ்க்கை.
-சாக்ரட்டீஸ்
7.தமக்குத் தீங்கிழைத்தவன் தன் வசம்
சிக்கிய போதிலும் அவனை
மன்னிப்பவனே இறைவனுக்கு நெருக்கமாகிறான்.
-சாக்ரட்டீஸ்
8.உலகில் நல்லது ஒன்றே
அறிவு, தீயது ஒன்றே
அறியாமை.
-சாக்ரட்டீஸ்
9.உனது அறிவையும் ஆற்றலையும் பகிர்ந்து கொள்ளவிட்டால் அது உன்னை
அழித்துவிடும்.
-சாக்ரட்டீஸ்
10.நீ ஒருவனிடத்தில் உதவியாகப் பெறக்கூடியதை எக்காரணத்தை முன்னிட்டும் உரிமையாகக் கேட்காதே.
-சாக்ரட்டீஸ்
11.மிகக் குறைந்ததைக் கொண்டு
திருப்தியடைபவனே முதன்மையான செல்வம். ஏனெனில் இயற்கையின் செல்வம் திருப்திதான்.
-சாக்ரட்டீஸ்
12.தேவைகள் குறையும் அளவிற்கே தெய்வத்தன்மையை அடைவோம்.
-சாக்ரட்டீஸ்
13.மலர்களைச் சுற்றி மணம்
கமழும்; அதுபோலத் தான்
செயற்கரிய செயல்களைச் சூழ்ந்து புகழ் திகழும்.
-சாக்ரட்டீஸ்
14.பிறர் குறையைக் காண்பவன் அரை மனிதன், தன்
குறையைக் காண்பவன் முழு
மனிதன்.
-சாக்ரட்டீஸ்
15.மனிதன் குறையுள்ளவன் மட்டுமல்ல, குறை
காண்பவனும் ஆவான்.
-சாக்ரட்டீஸ்
16.உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் அமையும். உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை அமையும்.
-சாக்ரட்டீஸ்
17.ஆடம்பரம் என்பது நாமே
தேடிக் கொள்ளும் வறுமை
-சாக்ரட்டீஸ்
18.மனிதனின் இயற்கையான குணங்களில் ஒன்று, மிகச் சிறப்பாக சிந்தனை செய்வது. ஆனால்
முட்டாள் தனமாகச் செயல்படுவது.
-சாக்ரட்டீஸ்
19.புரிந்துகொள்ளாதபோதும், பொறாமைப்படும்போதும், மனிதன் மற்றவனை முட்டாளாகக் கருதி விடுகிறான்.
-சாக்ரட்டீஸ்
20.உலகமே நாடக மேடை.
அனைத்து ஆண்களும், பெண்களும் அதில் நடிகர்களே.
-சாக்ரட்டீஸ்
21.தன்னைப் பூரணமாக அறியாதவன் பிறரை ஒரு நாளும்
சரியாக அறிய முடியாது.
-சாக்ரட்டீஸ்
22.நல்லது போனால் தெரியும்; கெட்டது வந்தால் தெரியும்.
-சாக்ரட்டீஸ்
23.யோசனைகளைக் கூறுங்கள் என்று
பிறரைக் கேட்கிறோம், ஆனால்,
நம் கருத்தை அவர்கள் ஆமோதிக்க வேண்டும் என்று
தான் எதிர்பார்க்கிறோம்.
-சாக்ரட்டீஸ்
24.சாகச செயல்களின் நறுமணம்தான் புகழ்.
-சாக்ரட்டீஸ்
25.தன்னை வெல்ல முடிந்தவனே மிகப்பெரிய வீரன்.
-சாக்ரட்டீஸ்
26.உண்பதற்காக வாழாதே, உயிர்
வாழ்வதற்காக உண்.
-சாக்ரட்டீஸ்
27.இப்போது செய்வதைவிட, இன்னும் சிறப்பாக பணியாற்ற திறமையும், வாய்ப்பும் இருந்தும் அப்படி
செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே.
-சாக்ரட்டீஸ்
28.அடகு வைக்கப்பட்ட நேர்மை
ஒருபோதும் திருத்தப்படுவதில்லை.
-சாக்ரட்டீஸ்
29.எதைப் பற்றியும் பிறருக்குக் கற்றுக் கொடுக்க என்னால் முடியாது; அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே என்னால் முடியும்.
-சாக்ரட்டீஸ்
30.அஞ்சக்கூடியது மரணமல்ல. தர்மத்திற்குப் புரம்பானவற்றைச் செய்யவே அஞ்ச வேண்டும். அதர்மம் ஆபத்தானது.
-சாக்ரட்டீஸ்
31.புரிந்து கொள்ளாதபோதும் பொறாமைப்படும்போதும் மனிதன் மற்றவனை முட்டாளாகக் கருதி விடுகிறான்.
-சாக்ரட்டீஸ்
32.உலகை ஆட்டிவைக்க விரும்புபவன் முதலில் தன்னை இயக்கிவைக்க வேண்டும்.
-சாக்ரட்டீஸ்
33.என்னால் எதையும் கற்பிக்க முடியாது! அவர்களை சிந்திக்க வைக்கவே முடியும்!
-சாக்ரட்டீஸ்
34.எப்படி இருந்தாலும் திருமணம் செய்து கொள். நல்ல
மனைவியாக கிடைத்தால் மகிழ்ச்சியாக இருப்பாய். மோசமான மனைவி
கிடைத்தால் நீ அறிஞனாவாய்.
-சாக்ரட்டீஸ்
35.நேர்மையாய் இருந்து சாவது,
நேர்மையின்றி வாழ்வதைவிட மேலானது.
-சாக்ரட்டீஸ்
36.நட்பைப் பெறுவதில் நிதானமாக இரு. நட்பைப் பெற்றவுடன் உறுதியுடன் நீடித்து நட்பைக் காப்பாற்று.
-சாக்ரட்டீஸ்
37.மற்றவர்களால் முடியாததை செய்து
காட்டுவது திறமை; திறமையால் முடியாததை செய்து காட்டுவது மேதாவித்தனம்.
-சாக்ரட்டீஸ்
38.தவறுக்கு வருந்தாதே. திருத்திக் கொள்வதில் வெட்கப்படாதே.
-சாக்ரட்டீஸ்
39.பணிவு வேண்டும்; ஆனால்
கோழைத்தனம் கூடாது. துணிவு
வேண்டும்; ஆனால் தலைக்கனம் கூடாது.
-சாக்ரட்டீஸ்
சாக்ரட்டீஸ் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Socrates Motivational Quotes in Tamil