தாகூர் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Tagore Motivational Quotes in Tamil
1.செபமாலையை உருட்டிக்கொண்டு மூலையில் உட்கார்ந்திருக்காதே. நீ
விரும்பும் கடவுள் இங்கேயில்லை. அதோ புழுதிபடிய வியர்வை வடிய நிலத்தை உழுது
பாடுபடுகிறானே விவசாயி அவனிடம் இருக்கிறார்.
-தாகூர்
2.உயர்ந்த பண்பாடு என்ற
சிறைக்குள் அடைப்பட்டு அதைப்பயில நேர்மை, ஒழுக்கம் என்னும் சட்டதிட்டங்களை நமக்கு நாமே
எற்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மனிதர்கள் என்று சொல்லிக்கொள்வதில் பொருள்
இருக்க முடியும்.
-தாகூர்
3.குழம்பிற்கு மிளகாய் எப்படி
அவசியமோ அப்படி காதல்
வாழ்க்கையிலும் சற்று கோபதாபம் அவசியம் வேண்டும். இல்லாவிடில் அது ரசிக்காது.
-தாகூர்
4.உங்கள் அன்பை இரகசியமாக வைத்திருக்காதீர்கள்.
-தாகூர்
5.மனிதன் உள்ளதை உள்ளபடி நோக்கும் ஆற்றல் உடையவனாக இருக்க வேண்டும். தன்
சொந்தத் தேவைக்கென்று அமைந்ததாக எதையும் கருதாமல் இயற்கையோடு ஒட்டி
வாழத் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
-தாகூர்
6.முயற்சி என்பது இதயத்துள் மூளும் வெறும் உணர்வு
மட்டுமல்ல ஆற்றலைக் கிளப்பும் ஒரு தூண்டுகோல் அது.
-தாகூர்
7.பெண்களிடம் ஓர் அபூர்வ
சக்தி இருக்கிறது. இந்தச்
சக்தியை மதித்து உபயோகிப்பதில்தான் பெருமை
இருக்கிறது.
-தாகூர்
8.சீர்தூக்கிப் பார்க்கும் ஆற்றல்
நமக்கு இல்லாவிட்டால் அதனால் விளையும் தீங்கை வட்டியும் அசலுமாக நாம் அனுபவித்துதான் ஆக வேண்டும்.
-தாகூர்
9.உண்மையான மகிழ்ச்சி நாம்
எவ்வளவு பொருளை ஈட்டுகிறோம் என்பதில் இல்லை அந்தப்
பொருளில் எவ்வளவு தர்மம்
செய்கிறோம் என்பதில் தான்
இருக்கிறது.
-தாகூர்
10.வீட்டுக்கு ஒளி தரும்
விளக்கே வீட்டை எரிக்கவும் செய்யும்
-தாகூர்
11.எல்லோரும் தம்மை விட்டுவிட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயல்கின்றனர்.
-தாகூர்
12.ஒரு மலரையோ, ஒரு
பட்டுப் பூச்சியையோ அதன்
தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம். ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!
-தாகூர்
13.மனிதன் உலகோடு தனக்குள்ள உறவை உணராவிட்டால் அவன் வாழும்
இடம் சிறைக்கூடம்.
-தாகூர்
14.மனிதன் தன் எண்ணங்களை நல்ல வழியில் செலுத்தினால் அவனது போக்கு உலகின்
போக்குடன் பொருந்தும் அப்போது அவனது வாழ்வில் இனிமையும் அமைதியும், அழகும் மிளிரும்.
-தாகூர்
தாகூர் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Tagore Motivational Quotes in Tamil