மனதை தொடும் உருக்கமான வரிகள் -01| Heart touching lines in Tamil
1.என் பிரிவு
உனக்கு இனிக்குமென்றால்
சென்றுவிடு எனக்கு
அது கசந்தாலும்
சரியே
2.என் மௌனங்களோடு
காத்திருக்கிறேன்
உன் வார்த்தை வரம்தரவேனும்
வா...!
3.உன் கண்களை
மட்டும் மூடிக்கொள்ளாதே
ஏனென்றால்
என் கவிதைக்கு
உன் காதல்
தெரியாமல் போய்விடுமல்லவா
4.கடிகார
நொடிமுள்ளாய்
உன்னுள் சுழலவைத்து
விட்டாய் அன்பில்
5.ஊடலில்
கடந்துபோன
நாட்களையும்
மீட்டெடு
நாழிகை போதவில்லை
காதலிக்க...!
6.அடிக்கடி
தொலைப்பதும்
உன்னை நொடிக்கொருமுறை
தேடுவதும் உன்னை
7.எந்த இழப்பையும்
தாங்கிக்கொள்வேன்
உன்னைதவிர
8.நிஜம்
நிழலாகும்போது
நினைவுகள்
நிரந்தரமாகின்றது
9.உன்னிடம் மட்டும்
என் கோபங்கள்
நீடிப்பதேயில்லை
10.மனம்
சாயும் போதெல்லாம்
தாங்கி கொள்கின்றாய்
நீ...!
11.வார்த்தைகளில்
வதைத்துவிட்டு
வரிகளில் சமாதானம்
செய்கிறாய்...!
12.விலகாமல்
நீயிரு விழியோடு
நானிருப்பேன்
13.எத்தனை
புகைப்படம் எடுத்தாலும்
என் விழிகளிலாடும்
உன் நிழல்படத்தைப்போல்
எதுவும் அழகில்லை
14.தடைகளில்லாத
போதும்
தடுப்புச்சுவர்
போடுது நாணம்
15.உனக்கு
என்னை பிடித்ததிலிருந்து
நானுமென்னை
அடிக்கடி ரசித்து
கொள்கின்றேன்
16.எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி
ஏமாற்றத்தை
பரிசளிக்கிறாய்
17.கொஞ்சம்
கலந்த பொய்யில்
உன் கொஞ்சல்
மொழியும் அழகு
கவிதையைபோல்
18.உன் மார்பில்
தஞ்சம் தேடுது
மனம் மரணிக்கும்போது
19.பொன்னுமில்லை
அதிக விலையுமில்லையென்றாலும்
கோடிகளை
தாண்டிய மதிப்பு
நீ அன்பாக
வாங்கி தந்ததால்
20.காலத்தின் மதிப்பு
தெரிந்தாலும்
உனக்காக கரையும்
நிமிடங்களை
தடுக்க முடியவில்லை
21.சிக்கலில்
மாட்டிக்கொண்டாலும்
மகிழ்ச்சியே
தீர்த்துவைப்பது
நீயென்பதால்
22.சேமித்து வைத்த
உன் நினைவுகளை
சிறுக சிறுக
செலவழிக்கின்றேன்
நீயில்லா பொழுதுகளில்