தமிழ் பீலிங் கவிதை | Sad Quotes in Tamil
1.கடலில் நின்று கலசத்தை கவிழ்த்தான்
சாம்பலாக கரைந்து சென்றார் நீந்த கற்றுக்கொடுத்த தந்தை..
(கேட்டதில் வலித்தது)
2.நிஜத்தில் பாதி
கனவில் மீதி
என்று வாழ்க்கை கடந்துக்கொண்டிருகின்றது...
3.பழகிடும் உறவுகள் விலகிடும் பொழுதினில்
இதயங்கள் தா ( தூ) ங்காது
4.வேடிக்கை பார்ப்பவனுக்கு இழப்பின் மதிப்பு புரியாது
5.நம் உறவாக இல்லாத போதும்
அவர்களின் மரணம் மனதை பாதிக்கதான் செய்யுது
6.வழமைபோல் உலகம் அமைதியாகவே இயங்கிக்கொண்டிருக்கு
ஆங்காங்கே உயிர்கள் துடிப்பதை ரசித்தவண்ணம்...
7.நினைவுகளும் சுமை
மனதுக்கு
தொல்லையாகும் போது
8.நேசித்தலை விட பிரிதலின் போது
உன் நினைவுகள் இரட்டை சுமை...
மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடு
உன் இதயத்தை...
9.ஏற்றுக்கொள்ள தாங்க முடியாத
இழப்புகளிலும்
துயரத்திலும் விதிமேல்
பழிபோட்டு மனதை
தேற்றிக்கொள்வோம்
( மரணத்தை ஜெயித்தவர் யாருமில்லை)
10.கண்களில் மிதந்த
அழகிய காட்சியெல்லாம்
சில நேரங்களில் தூசியாகி
கண்ணீரை தருகிறது.
11.உறக்கம் தொலைந்த இரவுகளில்
உறங்கிய நினைவுகள்
விழித்துக்கொ(ல்)ள்கிறது...
12.தொட்டுச்செல்லும் நினைவுகளைதான்
விடாமல் துரத்துகின்றது மனம்...
13.சில ரணங்களை
மறக்க ஏதோவொன்றை
மனம் ரசிக்கதான்
வேண்டும்
14.கலைந்து போன
கனவிலும் வலியான நினைவுகள்
15.நிஜத்தின் வலியில்
கற்பனை எல்லாம்
இறந்து போனது
16.சில நேரங்களில் தனிமை கடினம்
சில நேரங்களில் தனிமை
தான் இனிமையான தருணம்...!
17.பசித்தவருக்கு தெரியும்
உணவின் அருமை...
இழந்தவருக்கு புரியும்
உறவின் அருமை....
18.சிரித்த நிமிடங்களை விட,
அழுத நிமிடங்களே...
என்றும் மனதை
விட்டு நீங்குவதில்லை....
(ஞாபகங்கள்)
19.சிலரது வாக்குறுதிகள்
தண்ணீரில் எழுதும்
எழுத்துக்களை போன்றதே....
20.புகைப்படத்திலும்
புன்னகைப்பதில்லை
புன்னகைப்பதே
மறந்துவிடுகிறது சிலருக்கு...
( விரக்தி )
21.பிரிவின் வலி
பிரிந்தவர்களுக்கு மட்டுமல்ல
பிடித்தவர் அருகில்
இல்லாதவர்களுக்கும் தான்...
22.நினைவுகள்
என்னை
துரத்த...
சற்றும்
நிற்காமல்
ஓடிக்கொண்டே
நானும்
முடிவுறா பயணமாக
23.சில காயங்கள்
ஆறாதிருப்பதே நல்லது
மீண்டும்
காயங்களை ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க...
24.எரித்து
கொண்டிருக்கும்
நினைவுகளை
அணைத்து
கொண்டிருக்கின்றேன்
மையில் வரிகளாக...
25.பேசி பயனில்லாத போது
மெளனம் சிறந்தது
பேசியே அர்த்தமில்லாத போது
பிரிவே சிறந்தது
26.பிறரிடம்
பகிர முடியாத
வேதனையைக் கூட
ஆற்றிட விழிகள்
உளற்றெடுக்கும்
அருவி தான் கண்ணீர்
27.நேசிப்பவர்கள்
எல்லாம் நம்மோடு
இருந்து விட்டால்
நினைவின் மொழியும்
பிரிவின் வலியும்
உணர முடியாமலே
போய்விடும்
28.பிரிந்து போவாய் என
தெரியும்
மறந்து போவாய் என்
தெரியாது
29.மலரும் நினைவுகளிலும்
சில வாடியேதான்
இருக்கின்றது
30.வானவில்லாய் நினைவுகள்
வந்து மறைந்தாலும்
வண்ணங்கள் மனதில்
பதிந்துவிடுகிறது
31.நீயுமா இப்படி
என்ற வார்த்தையில்
மிச்சமிருந்த ஒருதுளி
நம்பிக்கையும் உதிர்ந்துபோன
வலியிருக்கும்
32.மன காயங்கள்
ஆறியபோதும்
நினைவுக்கு
வரும்போதெல்லாம்
வலிகள் மட்டும் ஏனோ
புதிதாககே இருக்கின்றது
33.சில சமயம்
மீள முடியாதா
தனிமைக்கு தள்ளப்படுகின்றேன்
எனது பேச்சுக்கு
பிறர் இடம் இருந்து
மதிப்பு குறையும் போது
34.யாரை
பிரிந்த பின்
உன்னால் இயல்பாக
இருக்க முடியவில்லையோ
அவர்கள் தான்
உன் இதயம்
என்று புரிந்துக்கொள்
35.வார்த்தைகளில்
அன்பை செலுத்துங்கள்
அம்பு துளைப்பதை
போல பேசாதீர்கள்
அம்பை விட
வார்த்தைகளே வலிமையான
காயங்களை உண்டாக்கும்
36.காயங்கள் உருவாக
கத்திகள் தேவை இல்லை
புரிதலற்ற
வார்த்தைகளே போதும்
வலிக்க வலிக்க
நின்று கொல்லும்
37.சில சந்தர்ப்பங்களில்
இழப்பதற்கும்
தயராக இருங்கள்
எதுவும் எளிதில்
கிடைப்பதில்லை
38.அனைவரும்
அருகில் இருந்தும்
அனாதை போல்
உணர வைக்கின்றது
நாம் நேசித்தவரின் பிரிவு