மண்ணில் பூத்த | தமிழ் அன்பு கவிதைகள் - 01 | Tamil Anbu Kavithai
1.மண்ணில்
பூத்த பூக்கள்
தான் உதிரும்
நம் மனதில்
பூத்து நட்புக்கள்
என்றும் உதிர்வதில்லை...
2.மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும்
கோபத்தில் உள்ள அன்பையும்
யாரால்
உணர முடிகிறதோ
அவர்களே
நமக்கு கிடைத்த
உன்னதமான உறவு
3.நமக்காக வாழ்கின்றவர்கள்
நம்மிடம் எதிர்பார்ப்பது
நம் சந்தோஷத்தை மட்டுமே...
4.வெளிப்படுத்த தெரியாத
அன்பு கூட
பேரன்பு தானே...
5.பிடிக்காதவரை
நேசிக்க தொடங்கிவிட்டால்
இனி பிரிவுக்கே
இடமில்லை...
6.அன்புடன் பேசுங்கள்
அது உங்களை
அழகாக்கும்...
7.கிடைக்கும் என்பதில்
பிரச்சனை இல்லை
ஆனால் நிலைக்குமா
என்பதில்
தான் பிரச்சனை
(அன்பு)
8.நமக்கு பிடித்தவர்களிடம் கெஞ்சவும்
நம்மை பிடித்தவர்களிடம் கொஞ்சவும்
அதீத அன்பு மட்டுமே காரணம்
அந்த தருணங்கள் பேரழகு
9.அருகில் இருப்பதால்
அன்பு அதிகரிப்பதும் இல்லை
தொலைவில் இருப்பதால்
அன்பு குறைவதுமில்லை
10.சிலரை விட்டு
விலக முடிவதில்லை
காரணம் உலகமாய் நினைத்து
வாழ்ந்து விட்டதாலும்
உயிர் கூட உடலை விட்டு
பிரிய மறுப்பதில்லை
11.அன்பு என்பது
ஒரு சிறந்த பரிசு
அதை பெற்றாலும்
கொடுத்தாலும்
சந்தோஷமே...!
12.நம்
அன்பு ராச்சியத்தை
ஆட்சி செய்ய
கால் பதிக்கின்றாள்
குட்டி தேவதை