எந்த அவமானத்தையும் | வலி பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் 04
61. செயல்களால் கொன்று விட்டு பிறகு மன்னிப்பு கேட்டு என்ன பயன்? வலிகள் குறையப் போவதும் இல்லை.. செய்த செயல்கள் மனதை விட்டு அழியப் போவதும் இல்லை.
62. வாழ்க்கையில் வலிகளும் உண்டு.. வழிகளும் உண்டு. எனவே தைரியமாய் நகரு..
63. இன்றைய உழைப்பின் வலி.. நாளைய வாழ்க்கையின் ஒளி.
64. தனிமை என்பது வலி என்று யார் சொன்னது? தனிமை என்பது வழி.. நம்மை பற்றி நமக்கே புரிய வைக்கும் நிலை..
65. சின்ன வயசுல பெத்தவங்ககிட்ட வலிக்கிற மாதிரி நடிச்சோம்... இப்ப வலிக்காத மாதிரி நடிக்கிறோம்!
66. காயத்தின் வலியை ஓரளவு தாங்கிக் கொள்ளலாம் - ஆனால் வலியே ஆறாத காயமாகி விட்டது. நிரம்பி விட்ட உண்டியல் போல வேதனைகளை - இனியும் சுமக்க முடியாமல் தவிக்கிறது என் மனசு.
67. என்னுடைய வலிகளுக்கு காரணம் என்னுடைய எதிர்பார்ப்பு மட்டுமே..
68. எப்போதும் சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள். வலிகள் கூட பழகிப்போகும்.
69. எந்த அவமானத்தையும் வலியாய் எடுத்துக் கொள்ளாதே வழியாய் எடுத்துக்கொள்.
70. இதயம் வலித்தாலும் சிரி.. அது உடைந்தாலும் சிரி..
71. வரம்பு மீறிய வலியை கொடுப்பவர்கள் முன்னே.. ஒரு போதும் கதறி அழுத்துவிடாதே.. கலகலவென சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்துவிடு.. குழம்பி சாகட்டும்.
72. வலிகளை விட கொடுமையானது.. நாம் நேசிக்கும் ஒருவரிடம் நாம் விரும்பும்போது பேச முடியாமல் போவது தான்.