உனைக்காண | மனதை தொடும் உருக்கமான வரிகள் -02 | Heart touching lines in Tamil
23.நிறமற்ற
உன் நிஜத்தில்
என் வாழ்வும்
வண்ணமானது
24.வெண்மதி ஒளியில்
உன் மதிக்காண
பௌர்ணமி
நிலவாய் காத்திருக்கேன்
25.புயலாய் மோதும்
உன் மூச்சுக்காற்றில்
சிக்கி திணறிப்போகிறேன்
நானும்...!
26.தென்றல்
தீண்ட சாயும்
நாணலாய்
உன் அன்பினீர்ப்பில்
சாய்கிறேன் நானும்...!
27.உனைக்காண
காத்திருக்கும் தருணம்
மனதும் இனிதாய்
மலரும்...!
28.வாழ்கின்றேன்
என்பதைவிட
உன்னால்
வாழ்கின்றேன்
என்பதே நிஜம்
29.முழுமதிக்காண
அனுமதியில்லை
நீயென் முகவரியாகுமுன்
30.மலரிலும்
மென்மையான
உன்னன்பில்
மீண்டும் மீண்டும்
நான் ஜனனிக்கின்றேன்
புதிதாய்...!
31.இதயம் கையளவு
நம் காதலதில்
கடலிலும் ஆழம்
32.இறந்தகாலத்தை
மறக்கவைக்கும்
என் எதிர்காலம்
நீ...!
33.உன் சாயலிலொரு
முகம்
என் கண்முன்
நிறுத்திசெல்கிறது
உன்னை...!
34.அழிக்க துடிக்கும்
அலையைபோல்
மனதில் பதிந்த
(சு) வடுகளையும்
அழிக்கமுடியாமல்
தத்தளிக்கின்றேன்
35.அன்று
தரையில் நடைபயில
நம்பிக்கையெனும்
கரம் கொடுத்தார்
தந்தை...!
இன்று வாழ்க்கையெனும்
பாதையில் பயணிக்க
அன்புகரம் கொடுக்கின்றாய்
நீ...!
36.நானுன்
சொந்தமானபின்னும்
ஏனோ அடிக்கடி
திரைபோடுகிறது
நாணம்...!
37.என்
ஒவ்வொரு
செயலிலும்
நீயே கலந்திருக்கின்றாய்...!
38.மரக்கிளையில்
மறைந்திருந்த
மழை துளிகளையும்
தட்டியெழுப்புகிறான்
மழையில் நனைய
எனக்கு பிடிக்குமென்று...!
39.உனை
கண்டாலே
என் மனதிலும்
பலவண்ண
தோரணங்கள்...!
40.கொன்றுவிட
நினைக்கிறேன்
நினைவுகளை
அவை என்னையே
வென்றுவிடுகிறது
41.உன் இடம்
வெறுமையானதால்
நாழிகையும்
நகர்கிறது
மெதுவாய்
42.இரவும் அழகு
உன்னுடன் சேர்ந்து
நிலவை ரசிக்கும்போது...!
43.நானும்
ஒரு கூண்டுக்கிளியே
உன் அன்பெனும்
கூண்டில் அடைப்பட்ட
44.காற்றிலும்
வாசம் செய்கின்றாய்
சுவாசத்தில் கலந்து
எங்கும் நிறைந்தவனாய்