துன்பமும்| மனதை தொடும் உருக்கமான வரிகள் -03 | Heart touching lines in Tamil
45.விட்டுவிடாதே
என் கரத்தை
குறைந்திடுமே
என் ஆயுள்
ரேகையும்
46.காதலில்
விழிமொழி
அழகென்றேன் அவனோ
இதுவும் காதல்தானென
கண்களில்
இதழ் பதித்து
சென்றான்...!
47.அனைத்துமிருந்தும்
எதுவுமில்லாத
மனநிலை
நீயில்லாததால்
அருகில்
48.பாதை
போகும் போக்கில்
பாதம் போனாலும்
என் விழிகள்
தொடர்வது
உன்னையே
49.வீழ்த்தும்
ஆயுதம்
விழிகளென
தெளிவாகவே
புரிந்துவைத்துள்ளான்
50.துன்பமும்
இன்பமாகும்
உன் கரம்
கண்ணீரை
துடைக்கும் போது
51.மூழ்கி போனேன்
உன்னில்
மீழுமெண்ணம்
இல்லை
52.இருவரி
கவிதையும்
பிடிக்கும்
அதுவுன்
விழிகளென்றால்
53.நொடியேனும்
இமைக்கவிடாது
துரத்திக்கொண்டிருக்கு
உன் நினைவுகளென்னை
கடிகார முட்களாய்
54.உன் கரமும்
மாலையாக
தொலைந்தேன்
நானும்
மெல்ல மெல்ல
55.விழிகளுக்குள் நீ
விழித்திருக்க
உறக்கமென்பதும்
எனக்கேது
56.ரகசியமாய்
மனதில் நுழைந்து
என்னை
உன் ரசிகையாக்கி
சென்றாய்
57.என் நலனே
உன் மகிழ்ச்சி
என்பதால்
இப்போதெல்லாம்
அதிகமாய்
வேண்டிக்கொள்கிறேன்
நமக்காக
58.மூழ்கினேனா
மூழ்கடிக்கபட்டேனா
எதுவென்றாலும்
மகிழ்வே
உன்(னில்)னால்
என்பதால்
59.மரத்தில்
படர்ந்த கொடியாய்
படர்ந்துவிட்டாய்
மனதில்
அன்பில்
நினைத்து...!
60.தீண்டும்
உன்னிதழால்
நாணம்
கொண்டு
சிவக்கின்றது
மருதாணியும்
61.தழுவும்
உன் சுவாச
காற்றில்
நானும் மறந்தேன்
ஸ்வரங்களை
62.மௌனமாய்
நீயிருக்க
மனதை கொல்லுது
உன் நினைவு
63.என்னுள்
நடமாடும்
உயிர்
புள்ளி நீ
64.விடிந்தபின்னும்
மறையாத
நிலவாக
நீ நகர்ந்தபின்பும்
நிழலாக
உன் பிம்பம்
என்னுள் சுற்றுது
65.என்னுடன் பயணிக்கும்
நிழலாய் எப்போதும்
நீ வேண்டும்
66.என் கண்ணீருக்கு
ஆயிரம் காரணங்கள்
இருக்க
என் சிரிப்பிற்கு
நீ மட்டுமே காரணமாய்
இருக்கின்றாய்