அன்புக்காக ஏங்கி | தமிழ் அன்பு கவிதைகள் - 02 | Tamil Anbu Kavithai
13.அன்புக்காக
ஏங்கி தேடாதீர்கள்
அன்புக்காக ஏங்குபவரை
தேடுங்கள்...!
14.நிலையான அன்புக்கு
பிரிவில்லை
சொல்லாத சொல்லுக்கு
அர்த்தமில்லை
தேடும் பாசத்திற்கு
தோல்வி இல்லை
உண்மையான
என் அன்புக்கு
மரணம் இல்லை
15.அக்கறையுடன் கேட்பதற்கு
பதில் சொல்வதே
அன்பின் வெளிப்பாடு...!
16.பிறர் அழகில்
மயங்காதே
அழகு கிடைப்பது
சந்தோசம் அல்ல
அன்புல்லம்கிடைப்பதுதான்
உன்மையான சந்தோசம்
17.நம்மிடம்
ஒன்றுமே இல்லாவிட்டாலும்
தர்மம் செய்ய
ஒன்றே ஒன்று
அளவற்றதாக உள்ளது
அது அன்பு
18.அன்புக்கு நிகரானது
எதுவும் இல்லை
பாசத்துக்கு கட்டுப்படாத
மனிதர்கள் யாரும் இல்லை
உண்மையான அன்புக்கும் பாசத்திக்கும்
என்றுமே பிரிவு
என்பது கிடையாது
19.அன்பு
எனும் விதை
தரமாக இருந்தால்
நட்பு
எனும் கனிகள்
சுவையாக கிடைக்கும்
20.உண்மையான அன்புக்கு
முகங்கள் தேவையில்லை
முகவரியும் தேவையில்லை
நம்மை நினைக்கும்
உண்மையான நினைவுகள்
மட்டுமே போதும்
21.காலங்கள் சிலரை
மறக்க செய்துவிடும்
ஆனால்
ஒரு சிலரின்
அன்பு காலத்தையே
மறக்க செய்துவிடும்
22.உண்மையான
அன்புகள்
நம்மை சுற்றி
இருக்கும் போது
நாம் யாரும்
தனி நபர் இல்லை
23.அன்பு மட்டும் தான்
உலகில் நிரந்தரமானது
அதை உண்மையாக்குவதும்
பொய்யாக்குவதும்
நாம் நேசிப்பவரிடம்
மட்டுமே உள்ளது
24.அன்பை மட்டும்
பகிர்ந்து கொண்டே இரு
ஏனொன்றால் அன்பின்
ஊற்று மட்டுமே என்றுமே
வற்றாத ஜீவநதி