என்னோட சோகம் | வலி பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் 03
41. உங்களை விமர்சிப்பவர்களை கண்டு கொள்ளாதீர்கள். ஏனெனில் அவர்களுக்கு தெரிந்தது உங்களைப் பற்றிய வதந்திகள் மட்டுமே. உங்களின் வலிகள் அல்ல...!
42. வலி மறக்க குடிப்பதாய் சொல்லும் கோழை இளைஞனே.. உன் தாயின் பிரசவ வலியைவிட உன் வலி பெரியதா என்று நினைத்துப் பார்..?
43. வாழ்க்கையில் சாதனை படைத்தேன் என்பதை விட, யாரையும் வேதனை படுத்தவில்லை என்பதே சிறந்தது...!
44. வாழ்க்கையில் வலிகள் உண்டு. அதே சமயம் வழிகளும் உண்டு. எனவே தைரியமாக நகரு...!
45. என்னோட சோகம் சில பேருக்கு சிரிப்பாகவும், நடிப்பாகவும் இருக்கு. ஆனா.. எனக்கு மட்டும்தான் தெரியும் என்னோட வலி...!
46. என்னை காயப்படுத்தாமல் வலிகள் தருவது நீ மட்டும்தான் ..! நான் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் என்னோடு இருப்பது நீ மட்டும்தான் ...!
47. தழும்புகள், காயத்தை நினைத்து வருத்தப்படுதவற்காக அல்ல... அந்த காயத்தை கடந்து வந்ததற்கு பெருமைப்படுவதற்காக!
48. நடந்துவந்த பாதைகளெல்லாம் முள்வேலிதான்... நடக்கின்ற பாதைகளும் கரடு முரடுதான்.. நடக்கப்போகும் பாதைகளும் துன்பம் துயரம்தான். நம்பிக்கை ஒன்றே நம் காலணி. நினைவுகள் மட்டுமே நிவாரணம்.
49. திமிரானவர்களிடம் நாம் காட்டும் அன்பு அதிகம் வலிகளையே கற்றுக் கொடுக்கும்....!!!!
50. முள் குத்தினாலே கத்தும் நாம், டாக்டர் ஊசி போடும்போது மட்டும் தாங்கிக்குவோம்.. வலி என்னவோ ஒன்றுதான்.. ஏற்றுகொள்ள துணிந்துவிட்டால் வலிகளும், வேதனைகளும் தூசிதான்...!
51. தனக்கே வலித்தாலும் தன்னை சேர்ந்தவர்களுக்கு வலிக்க கூடாது என்று நினைப்பது தான் உண்மையான அன்பு..
52. காயங்கள் உருவாக கத்திகள் தேவை இல்லை புரிதலற்ற வார்த்தைகளே போதும்; வலிக்க வலிக்க நின்று கொல்லும்..
53. அன்பு எவ்வளவு அழகானது என்று உன்னிடம் அறிந்தேன். அதே அன்பு எவ்வளவு வலிகளை தரும் என்பதையும் உன்னிடமே அறிந்தேன்.
54. எங்கே நாம் அதிகம் காயப்படுகிறோமோ, அங்கே தான் நம் வாழ்க்கையின் பாடம் தொடங்குகிறது..!!
55. எவரையும் பார்த்து இவருக்கென்ன குறை என்று எடை போட்டு விடாதே.. வலிகளோடு தான் வாழ்கிறார்கள் பலர்...!
56. பேசவவே கூடாது என முடிவெடுத்த பின்பும்.. வலிகள் மறந்து, கோபங்கள் மறந்து பேச வைப்பதுதான் உண்மையான அன்பு...!
57. காயங்கள் உருவாக கத்திகள் தேவை இல்லை சிலரின் மாற்றங்கள் போதும்.. வலிக்க வலிக்க கொல்லும்.
58. சிலரின் மௌனம் திமிரல்ல. அவர்களுக்குள் இருக்கும் வலி
59. உன்னிடம் நான் பேசிய நேரங்களை விட.. நீ என்னிடம் எப்போது பேசுவாய் என்று ஏங்கி தவித்த நேரங்கள் தான் அதிகம்.
60. வலிகள் நிறைந்த வாழ்க்கை தான் நமக்கு விதிக்கப்பட்டது. வாழ்ந்து தான் ஆக வேண்டும்.