பேச நினைத்த | One sided love quotes in Tamil - 01
151.பேச நினைத்த
வார்த்தைகளும்
தூரமானது உன்னருகில்
152.இன்னிசையாக
இதயத்துடிப்பும்
உனை காணும்
போதெல்லாம்...
(ஆனந்த யாழாய்)
153.இளைப்பாற
இடம் கேட்டேன்
இதயத்தில்
இணைந்து வாழும்
வரம் கொடுத்தான்...
154.உன்
நினைவில்
என் நொடிகளும்
கரைந்துக் கொண்டிருக்கு...
155.ஊடலும்
தேவை என்னில்
உன்னை தேட
156.குடைக்குள்
இரு இதயங்கள்
நனைகிறது
காதல் மழையில்...
157.பார்த்தநொடியே
கண்களுக்குள்
ஓவியமானாய்
காத்திருக்கு
விழிகளும்
உன்னுடன் சேர்ந்து
காவியம் பாட
158.நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்...
159.துன்பக்கடலில்
தத்தளித்த போது
துடுப்பாயிருந்து
கரை சேர்த்தாய்
160.மறந்துப்போன
மகிழ்ச்சியை
மறுபடியும்
மலர
வைத்தாய் நீ...
161.விடுவித்து
விடாதே
உன் விழிகளிலிருந்து
ஒளியிழந்திடுமே
என் விழிகளும்...
162.மொத்த
கவலைகளும்
கலைந்துப்போகிறது
உன் நினைவு
தென்றலாய்
தீண்ட
163.மௌனமாக
பேசிட
உன்னிதழ்
மயங்கித்தான்
போனது
என் மனம்...
164.விடுதலையில்லா
சட்டம்
வேண்டும்
உன் காதல்
பிடிக்குள்
அகபட்டுக்கிடக்க...!
165.என்
உறக்கத்தை
இரையாக்கி
கொள்கிறது
உன் நினைவு...!
166.இருவரி
கவிதையொன்று
இணைந்து
எழுதிடுவோம்
இதழ்களிலே
167.விழி
திறக்கும்வரை
காத்திருக்குறான்
வண்ணக்கனவுகளோடு
வண்ணத்துப்பூச்சியாக
வானில் சேர்ந்துப்பறந்து
ரசித்து மகிழ்ந்திட
168.உன்னால்
என் நொடிகள்
ஒவ்வொன்றும்
அழகானதே
169.எனக்கு
பிடித்ததையெல்லாம்
நீ ரசிப்பதால்
உனக்கு
பிடிக்காததையெல்லாம்
நான் தவிர்க்கிறேன்
170.காற்றோடு
கலந்து வரும்
உன் நினைவுச்சாரலில்
நனைகின்றேன்
நானும்...
171.மணலில்
கிறுக்கியதை
அலைவந்து
அழித்தாலும்
நாம் மனதில்
கிறுக்கியது
மரணம்வரை
அழியாது...
172.ஒப்பனைகள்
தேவையில்லை
உன் அன்பே
போதும்
என்னை அழகாக்க...
173.ஓசையின்றி
பேசிடுவோம்
விழிமொழியில்.....
ஒரு முறை
நோக்கிடுயென்
பார்வையை
174.யார்
பாதையையும்
தொடராத விழிகள்
உன் வழியை
தொடருது
175.உன்னிதய
துடிப்போடு
என்பெயரும்
கலந்திட
நம் காதலும்
அழகாக மலர்ந்தது....
176.விடைபெறும்
போதெல்லாம்
பரிசாக்கி
செல்கின்றாய்
அழகிய
தருணங்களை...
177.மனதோடு
நீ
மழையோடு
நான்
நனைகின்றது
நம் காதல்...!
178.அடைமழையில்
தப்பித்து
உன் அனல்
பார்வையில்
சிக்கிக்கொண்டேன்
179.நீ
கவனிக்காமலே
கடந்து
செல்வதால்
உன்மீது காதலும்
வளர்கிறது...!
180.பயணிப்போம்
ஒரு பயணம்
கரம்பற்றி
களைப்பாகும்
வரை
காதல் தேசத்தில்...!