உன்னைநினைத்து | One sided love quotes in Tamil - 02
181.உன்னை
நினைத்து
என்னை
மறப்பதுதான்
காதலென்றால்
ஆயுள் முழுதும்
வாழ்வேன்
எனை மறந்து
182.நீ
கட்டளையிடாமலேயே
கட்டுப்பட்டுக்கிடக்கின்றேன்
உன் அன்பில்
183.மனதில் காரிருள்
சூழ்ந்தபோது
உன் அன்பெனும்
ஜோதியில்
வாழ்வை
ஒளிமயமாக்கினாய்
184.உன்னளவுக்கு
அன்புகாட்ட
தெரியாவிட்டாலும்
நீ மகிழ்ச்சியாக
இருக்குமளவுக்கு
என் பாசமிருக்கும்
185.தழுவிச்செல்லும்
தென்றலாய்
உன் நினைவும்
மனதை வருடிச்செல்கிறது
186.இடைவெளிவிட்டு
நாமிருந்தாலும்
இதயங்கள்
இணைந்தே
பயணிக்கின்றது
187.நீயில்லா
பொழுதுகளில்
உன் நினைவும்
என் ரசணையாகிப்போனது
188.என் கவலைகளுக்கு
நீ மருந்தாகின்றாய்
உன் கவலைகளை
மறைத்து
189.மௌன
கவிதை நீ
ரசிக்கும்
ரசிகை நான்
190.சுழற்றும்
சூறாவளியிலும்
நிலையாக
நிற்கும் நான்
உன்
நினைவுத்தீண்டலில்
தடுமாறிப்போகின்றேன்
191.என்னை
துளைத்தெடுக்கும்
உன் நினைவுகளைவிடவா
இவ்வுலகிலோர்
கூர்மையான
ஆயுதமிருக்கபோகிறது
192.ஏதேதோயெழுத
நினைத்து
உன் பெயரை
எழுதிமுடித்தேன்
கவிதையாக
193.நீ
நலமா
எனும்போதெல்லாம்
நீயின்றி எனக்கேது
நலம் என்கிறது
மனம்...
194.வருவேன்
என்ற எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி ஏமாற்றுகின்றாய்
மழையைபோல்...
195.காயங்களும்
மாயமாகும்
என்னருகில்
நீயிருந்தால்
196.உன் நினைவுகளை
மீட்டியே
வீணை வாசிக்கவும்
கற்றுக்கொண்டேன்
197.நெற்றியில்
திலகமிட்டுக்கொள்ள
வரம் தந்தவனுக்கு
அன்பு பரிசாய்
அவன் நெற்றிக்கொரு
இதழில் திலகம்
198.நாம் இமைக்காமல்
பார்த்துக்கொண்ட
நொடிகளில்
நம் இதயங்களும்
இடம்மாறிக்கொண்டது
199.சாலையோர
நடைப்பயிற்சியில்
காலைநேர
தென்றலாய் நீ...
.விட்டுச்சென்ற
இடத்திலேயே
நிலைத்துவிட்டேன்
உன் நினைவுகளிலிருந்து
விடுபடமுடியாமல்...
201.நாணலும்
நாணம் கொண்டு
தலைசாய்ந்தது
உன் காதல்
மொழியில்
202.நீ எழுதாதபோதும்
பல கவிதைகள்
ரசிக்கின்றேன்
உன் விழிகள்
203.சலிக்காத ரசணைகள்
தூரத்து நிலவும்
அருகில் நீயும்...!
204.உன்
அருகாமை போதும்
தாய்மடியாய்
நினைத்து நானுறங்க
205.தனிமையும்
பிடித்துப்போனது
என்னுடன்
உன் நினைவுகளும்
வந்துவிடுவதால்
206.தொலைவில்
உன் குரல்
கேட்டாலும்
மனமேனோ
பறக்கின்றது
பட்டாம்பூச்சாய்
207.ஆறுதல் கூற
ஆயிரம்பேரிருந்தாலும்
உன்
அருகாமையைபோலாகுமா
208.உறங்கும் போது
கனவிலும்
விடிந்தவுடன்
நினைவிலும்
வாழும் வரை
உயிரிலும் நீயே..
(இப்படிக்கு
உன்னவள்)
209.நீ
வானவில்லாய்
இரு நான்
அதில் இருக்கும்
ஏழு நிறமாய்
இருப்பேன்..!
என்றும்
இணைப்பிரியாமல்...
210.காற்றை கண்ட
உடன் நடனமாடும்
மரங்களை போல
அவனை கண்டதும்
என் மனமும்
நடனமாடுகிறது...