வேறெதுவும் வேண்டாம் | One sided love quotes in Tamil - 05
271.நிலவின்றி
இரவிருந்தாலும்
உன் நினைவின்றி
துடிப்பில்லை
என்னிதயத்தில்
272.கோர்த்து வைத்த
வார்த்தைகளை
எல்லாம்
கொய்து விட்டாய்
பார்வையில்
273.வேறெதுவும்
வேண்டாம்
என்னவர்
ஆயுள்வரை
என் ஆயுளையும்
நீடித்துவிடு போதும்
274.அன்பெனும்
மெல்லிய கயிற்றில்
கட்டிப்போட்டாய்
யாரும் அவிழ்த்திட
முடியாத முடிச்சாய்
275.தொடு திரையில்
வந்தாலும் தொடும்
தூரத்தில்
உனை பார்த்தது
போல் வெட்கத்தில்
தவிக்குது மனம்
276.மலர்களில்லாத
போதும்
ரசிக்க தூண்டுது
கிளைகளை
மனம்
நறுமணமமாய்
நீயிருப்பதால்
மனதில்
277.எனக்காக
துடிக்க உன்னிதயம்
இருக்கென்ற
நினைப்பிலேயே
என்னிதயம்
சீராக துடித்து
கொண்டிருக்கு
278.முப்பொழுதும்
நீயென் அருகில்
இல்லா விட்டாலும்
கற்பனையில்
இருக்கின்றாய்
279.சில நிமிடம்
ரசித்தாலும்
மனதை வண்ணமாக்கி
செல்லும் வானவில்லாய்
நீயும் வண்ணமாக்குகிறாய்
மனதை
280.ரசிப்பதற்கு
பல இருந்தும்
மலையை
சூழ்ந்து கொண்ட
மேகமாய்
அனைத்தையும்
மறைத்து விடுகிறாய்
நீ நினைவாகி
நானேவுன் ரசனையென்று
281.சிறகடிக்கும்
நம் நினைவுகளை
சிதறாமல்
கோர்க்கின்றேன்
உன் அன்பெனும்
நார்க்கொண்டு
உதிர்ந்திடாத
மாலையாய்
282.இயந்திரமாய்
சுழலும் வாழ்க்கையில்
என் இதயமும்
சில எதிர்பார்புகளோடு
வாழ்ந்துக்கொண்டு
இருக்கென்றால்
அது நீகாட்டும்
அன்பினால் மட்டுமே
283.உனக்காக
கரையும் நிமிடத்தில்
அழகாய் வளர்கின்றது
நம் காதல்
284.விழிகளில்
ஜீவனும் ஏது
நீ விடைபெறும்
போது உனைக்காண
285.அன்பை விட
சண்டையே
அதிகம் என்றாலும்
மனம் சலிக்காமல்
தேடுகிறதே
விட்டு விட்டால்
மறைந்து போகும்
என்பதாலோ
286.நினைவில்
என் நிழலில்
என அனைத்திலும்
நீயாகிப்போனாய்
287.சாய்ந்து கொள்ள
தோள் தேடினேன்
ஏந்தி கொண்டாய்
அன்பாய்
எங்கும் நிறைந்தவனாய்
நினைவாகி
288.ஆள்கின்றாய்
அன்பில் வாழ்கின்றேன்
மன மகிழ்வாய்
289.ஓரிடத்தில்
மையம் கொண்ட
புயலாய்
உன்னை சுற்றியே
சுழல்கிறது என்னுலகம்
290.உன்னுலகம்
பெரிதாக இருக்கலாம்
ஆனால்
எனக்கான உலகம்
நீ மட்டுமே
291.எனக்கென்று
பயணங்கள் இல்லை
உன் தொடரலுக்காகவே
நடை போடுது
பாதங்கள் உனக்காக
292.மனதோடு
உரையாடுவதும்
சுகம்தான்
அது உன்னோடு
என்றால்
293.தொலைவும்
ஒரு தொலைவில்லை
நீ யென்னை
தொலைக்காத
வரையில்
294.ஒரு நொடி
இமை மூடினாலும்
ஒளியாகிறாய்
விழிகளுக்குள்
295.உன்னை தொட்ட
காற்று
எனை தீண்டியதோ
மனம் சில்லென்று
குளிர்கிறதே
296.இந்த பிடிவாதமும்
பிடித்திருக்கு
நீ எனக்காக
காத்திருப்பதால்
297.கவிதை எதுவும்
தோணவில்லை
நான் ரசிக்கும்
கவிதை
அருகிலிருப்பதால்
298.தளராத பிடிக்குள்
துளிர் விடுகிறது
நம் காதல்
299.என்னுள்
நினைவுகளை
புதைத்துவிட்டு
எங்கோ உலாவி
கொண்டிருக்கின்றாய்
300.சில நேரங்களில்
சிக்கிக்கொள்கிறேன்
சிந்தனைக்குள்
நீவரும் போது