கோடை காலத்தில் | True Love Quotes in Tamil-02
31.கோடை காலத்தில்
திடீர் மழை போல்
நீயும் வர
நனைகின்றேன்
நானும் சந்தோஷ
சாரல்களில்
32.கண்ணால் பேசாதே
வார்த்தைகளும்
மறைந்து
கொள்கிறது
வெட்கத்தில்
33.இரவுக்கு
நிலவழகு போல்
என் நினைவுக்கு
அழகு நீ
34.சுவை இருந்தும்
பருக முடியாத
ஆறிய தேநீராய்
மனம் அருகில்
நீ இல்லாததால்
35.என்
எண்ணம்
நீயாகிப்போக
எழுதுகோலும்
கிறுக்குகின்றது
ஓய்வின்றி
மையலை மையில்
கலந்து கவிதையாக
36.உன் அன்பின்
முன் சற்று
பிரகாசம்
குறைவுதான்
இவ் விளக்கின்
ஒளியும்
37.நிறமாலையாய்
நிழலாடுகிறாய்
மனமும் நிலைத்து
விடுகின்றது
உன் நினைவுக்குள்
38.காணாத போது
காண தவித்த
கண்கள்
உனை கண்டபின்
ஏனோ விழி
காண தயங்குது
38.கவிதைக்கு பொய்யழகு
என்பதும் பொய்பாகி
போகின்றது
நம் மெய்
காதல் கவிதையாகும்
போது
39.உன் நினைவின்றி
என் நொடிகள்
நகர்வதில்லை
40.தொலைதூரம்
போனாலும்
மனதோரம்
ஆடுகின்றாய்
ஊஞ்சலாய்
41.மௌனமும்
பேசும்
என்றுணர்ந்தேன்
காதல் மொழி
உன்னருகில்
42.மொழியறியா
காற்றும்
கவி பேசுது
உன் வருகை
அறிந்து
43.காயத்தின் வலிகூட
சுகமான காதலாகும்
காயப்படுத்துவது
நீயென்றால்
44.கொட்டும் மழையிலும்
சுட்டெரிக்கிறது
உன் சுவாசக்காற்று
அணைத்துவிடு
கொஞ்சம் நனைத்து
முத்த மழையில்
45.நீ சேயாகும்
போதெல்லாம்
நானும் தாயாகின்றேன்
உன் உறக்கத்தை
ரசித்தபடி
46.மழை
நின்ற பின்னும்
இலையில்
ஒட்டியிருக்கும்
நீர் துளிகளாய்
நீ சென்ற
பின்னும்
மனதை நனைக்கின்றது
நினைவு துளிகள்
47.கண்களில்
கலந்தாய்
காதலில்
கரைந்தேன்
48.கூட்டத்தில்
இருந்தாலும்
கூண்டு கிளியாய்
அடைபட்டு
விடுகிறேன் உன்னுள்
49.மலராய் மலர்ந்தாய்
மனதில் மகிழ்வானது
மண வாழ்க்கையும்
50.அசைப்போடும்
நினைவுகளோடு
அசையாது காத்திருக்கு
விழிகளும்
பல ஆசைகள் கொண்டு
ஆவலோடு உனக்காக
51.யாரோ இருவர்
கரங்களை கோர்த்தபடி
எனை கடக்கயில்
நாமிணைந்து
பயணித்த பயணங்கள்
தொடர்கிறது
என் மனதிலும்
52.உன்னோடு உரையாட
சேர்த்து வைத்த
வார்த்தைகளை
எல்லாம் உளறி
நிலவோடு
ஒரு ஒத்திகை
நீ வரும்
வரை
53.சுகமான
உன் நினைவு
தான் சுமையாகி
கனக்கின்றது
உனை காணாத
போது
54.உன் தாமதத்தில்
திட்டி தீர்க்கிறேன்
கடிகார முட்களை
மெதுவாக நகர்வதாய்
உன்னை திட்ட
மனமின்றி
55.கடத்துகிறாய்
காந்த கண்களால்
நழுவுகிறது
இதயமும்
உன் பக்கம்
56.உறங்காமல்
ஒரு கனவு
உன் அன்பின்
துளிகளை
பஞ்சணையாக்கி
57.உன்னை முந்தி கொண்டு
ஓடோடி வந்து
விடுகிறது
என்னை தொல்லை
செய்ய
உன் நினைவுகள்
இம்சைகளும்
இன்பமே உன்னால்
58.தொலைவு
ஒன்றும் தூரமில்லை
உன் குரல்
செவியோடு
இருப்பதால்
59.உன் ஆரவாரம்
இல்லையெனில்
என் உள்ளமும்
அசைவற்ற அகிலமே
60.அடிக்கடி
உனை தேடுகிறேன்
பொழுது போகாததால்
அல்ல நீயே
என் பொழுதென்பதால்