வண்ணங்களில் இல்லை | தமிழ் தத்துவம்| Tami Thathuvam 3
31.வண்ணங்களில் இல்லை வாழ்க்கை
உன் எண்ணங்களில் உள்ளது
அழகிய வாழ்க்கை...
32.அளவான உணவு
உடலுக்கு நலம்
அளவோடு பழகு
உறவுக்கும் நலம்...
33.குறுகிய காலத்தில்
எடுக்கப்படும் முடிவுகள்,
பின்னர் யோசிக்கையில்,
மனத்திருப்தியற்றதாகவே
இருக்கும்...
(சிந்தித்தல் - தெளிவாகவே)
34.நீ தேர்ந்தெடுக்கும் பொருள் கூட
உன் குணத்தை காட்டும்
ஆனால் நீ தேர்ந்தெடுக்கும் நட்போ
உன்னையே காட்டும்
35.எது நல்லது என்பதைத்
தொடர்ந்து சொல்லாதீர்கள்
தொடர்ந்து செல்லுங்கள்
36.தேடலும் தேவையும்
தீர்வதேயில்லை
மனிதவாழ்வில்
37.பெற்றோரின் அறிவுரை
நெல்லிக்காயைப்போல் கசந்தாலும்
அதை பொறுமையாக
சுவைத்தால்
வாழ்க்கை
இனிமையாய் இருக்கும்
38.லட்சியம்
இருக்குமிடத்தில்
அலட்சியம்
இருக்காது...
39.இரக்க மனமும்
இரும்பாகி போகிறது
சிலர் சுயநலவாதியாகும்
போது...
40.குறிக்கோள் இல்லாத
வாழ்க்கை வெறும்
குப்பை மேடு தான்...
41.பழகிய கத்தி என்றாலும்
பதம் பார்க்கிறது
பல நேரங்களில்
பக்குவமில்லாமல்
42.வருமானத்திற்கு மட்டும்
தான் இங்கு பஞ்சம்
வறுமைக்கு
மட்டும் இல்லை
எப்போதுமே பஞ்சம்...
43.உழைப்புக்கு
பலன் மெதுவாய்
கிடைத்தாலும்
அது என்றும்
உயர்வாய்தான் பேசப்படும்...
44.எதிர்காலம்
உள்ளங்கை
ரேகையில் இல்லை
அதுஉன் உள்ளத்தில்
உள்ளது...
45.பொறுமையும் தன்னடக்கமும்
வாழ்வின் பிற்பகுதியை
வெற்றியாக்கும்...