எட்டாத உயரத்தில் | Tamil kavithai 3
31.வெளிப்படையாக சிரித்து
பேசுபவர்களுக்கு தான்
மனதில் வெளிக்காட்ட
முடியாத பல வேதனைகள்
மறைந்திருக்கும்...
32.உன் சோகங்களை களைத்து விட்டு
உன் புன்னகையை கொண்டு
எல்லாவற்றையும் விரட்டி அடி
உன் முகம் மலரட்டும்
33.எட்டாத உயரத்தில்
இருப்பதால்தான் என்னவோ
எப்பொழுதும் ரசிக்கப்படுகிறது...!
(நிலா)
34.நாம் இருக்கும்
நிலைமையில்
இது தேவையா
என இழந்த
பலசந்தோஷங்கள்
தான் அதிகம்...!
(நிதர்சனம்)
35.நம்மை வெறுப்பேத்தவே
பலர் சிரிக்கின்றனர்
நாமும் சிரித்தேகடந்திடுவோம்...!
ஹேப்பி சண்டே உறவுகளே...!
36.பெரிய பெரிய
விசயங்களில் மட்டுமல்ல
சிறிய சின்னஞ்சிறிய
விசயங்களிலும் வாழ்க்கை
அடங்கியிருக்கிறது...!
37.பிறர் கொடுக்கும் தனிமையில்
நம்மை அறியலாம்
நாமாக எடுக்கும் தனிமையில்
உலகை ரசிக்கலாம்
(ரசிக்கின்றேன் உலகை)
38.எட்டி பிடிக்கும் தூரத்தில்
வெற்றியோ தோல்வியோ
இல்லை கற்பனையை தவிர
39.கொஞ்சம் மாற்றம் தோற்றத்தில்
கொஞ்சம் ஏமாற்றம் வாழ்க்கையில்
இவ்வளவுதான் வித்தியாசம்
குழந்தைப் பருவத்திற்கும்
தற்போதைய நிலைக்கும்...!
40.அறிவுரையினால்
புரிந்து கொள்பவரை விட
அனுபவத்திலிருந்து
தெரிந்து கொள்பவரே
அறிவாலும் மனதாலும்
பலசாலியாகிறான்...!
41.ஆறுதல் கூட
சொல்லத் தெரியாது
ஆனாலும் நிறைய
கவலைகளை மறக்க
செய்கின்றன குழந்தைகள்...!
42.என்னவிலை கொடுத்தாலும்
நாம் நினைக்கும்படி கிடைக்காது
(அனுபவங்கள்)
43.வென்றவனுக்கும்
தோற்றவனுக்கும்
வரலாறு உண்டு
வேடிக்கை பார்த்தவனுக்கும்
விமர்சனம் செய்தவனுக்கும்
ஒரு வரி
கூட கிடையாது
44.இறந்தகாலத்தை
மறக்கவைக்கும்
என் எதிர்காலம் நீ
45.தனித்து விடப்படும்
போது தான்
நம் பலமும்
பலவீனமும்
நமக்கே தெரிய வரும்