லியோ டால்ஸ்டாய் | Leo Tolstoy Inspirational quotes in tamil
பொறுமை மற்றும் நேர்மை ஆகியவையே, மிகவும் சக்தி வாய்ந்த வீரர்களுக்கு இணையானது.
-லியோ டால்ஸ்டாய்
எங்கு அன்பு நிறைந்திருக்கிறதோ அங்குதான் ஆண்டவனும் இருக்கிறார்.
-லியோ டால்ஸ்டாய்
மனித குலத்தை எது ஒன்றுப்படுதுமோ, அதுவே நல்லது, மேலானது, அழகானது. எது பிரித்துச் சிதைக்குமோ, அது கேடானது, தவறானது இழிவானது.
-லியோ டால்ஸ்டாய்
தாழ்ந்த வேலை செய்தால் தாழ்ந்தவர்களல்ல உயர்ந்த வேலை செய்தால் உயர்ந்தவர்களல்ல. எந்த வேலையைச் செய்கிறோம் என்பதைவிட, எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொருத்தே எதனையும் மதிப்பிட வேண்டும்.
-லியோ டால்ஸ்டாய்
மனிதர்கள் வெளிச்சத்தைவிட இருட்டையே விரும்புகிறார்கள். ஏனெனில், அவர்கள் செய்யும் தீய செயல்கள் மற்றவர்களுக்குத் தெரியாது போவதற்காகத் தான்.
-லியோ டால்ஸ்டாய்
'கலை கலைக்காகவே' என்ற கோட்பாட்டின்படி நமக்குத் திருப்தியளிக்கும் விஷயங்களில் எல்லாம் ஈடுபடுவது கலையன்று.
-லியோ டால்ஸ்டாய்
நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகள் அவசியம்.
-லியோ டால்ஸ்டாய்
ஒரு விநாடி கூட, நாம் நம்மை சந்தேகிக்க அனுமதிக்க கூடாது.
-லியோ டால்ஸ்டாய்
யாருக்காவும் எதற்காகவும் உங்களின் மகிழ்ச்சிக்கான காரணங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
-லியோ டால்ஸ்டாய்
ஒருபோதும் குற்றம் செய்யாதவன் எதையும் செய்யத் தகுதியற்றவன்.
-லியோ டால்ஸ்டாய்
வாழ்வதில்தான் இன்பம் உழைப்பதில்தான் வாழ்வு.
-லியோ டால்ஸ்டாய்
மனிதர்கள் சமம் என்ற அடிப்படையில் அறிவை விரிவடையச் செய்து அதனால் உலக மக்களுக்கு நன்மை பயக்கும் செயல்களைச் செய்வதற்குத் தூண்டுகோலாய் இருப்பதே உண்மையான கல்வி.
-லியோ டால்ஸ்டாய்
நான் அனைத்தையும் நேசிக்கிறேன். அதனால்தான் என்னால் அனைத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது.
-லியோ டால்ஸ்டாய்
உண்மையை அடைவதற்கு வேறு வழி கிடையாது. பகுத்தறிவின் மூலமே அதனை அடைய முடியும். வாய் மூலம் நம் உடலுக்கு உணவளிப்பதைப் போன்று பகுத்தறிவின் மூலமே நம் மனத்திற்குப் சக்தி அளிக்க முடியும்.
-லியோ டால்ஸ்டாய்
நாம் அனைவரும் ஒருநாள் மரணித்துப் போவது நிச்சயம். அதனால் வாழும் காலத்தில் பிறருக்கு உதவுவதை கடைமையாக கொண்டு வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்.
-லியோ டால்ஸ்டாய்
நீங்கள் நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. தீமை செய்வதை நிறுத்துங்கள்.
-லியோ டால்ஸ்டாய்
தொழில் எத்தனை கீழ்த்தரமானாலும் அதைச் செய்வதில் அவமானம் ஒன்றும் இல்லை. சோம்பேறியாகத் திரிவதுதான் அவமானம்.
-லியோ டால்ஸ்டாய்
செல்வாக்கு நீடித்திருக்க வேண்டுமானால் செல்வத்தைப்போலவே அதையும் சிக்கனமாகவே செலவு செய்ய வேண்டும்.
-லியோ டால்ஸ்டாய்
வாழ்க்கையில் முழு திருப்தியை எதிர்பார்க்கின்றீர்களா? உங்களால் ஒருபோதும் மனநிறைவுடன் இருக்க முடியாது.
-லியோ டால்ஸ்டாய்
நாம் அனைவரும்
மரண தண்டனைக்கு
ஆளானவர்கள். ஆனால்
தூக்கிலிடும் தினம்தான்
வேறுபடும்.
-லியோ
டால்ஸ்டாய்
வார்த்தையின் உதவியில்லாமல்
சாடை, கை,
நெளிவு, உடல்
வளைவு, கன்னக்
குழிவு, கண்
பார்வை இவற்றின்
மூலமாக சுலபமாகத்
தன் உள்ளத்து
உணர்ச்சிகளை வெளியிட்டு
விடுவாள் பெண்.
-லியோ
டால்ஸ்டாய்
மரணத்திற்குப் பின் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்கிற வரையில் மனிதர்கள் மரணத்தைக் கண்டு பயந்துகொண்டுதான் இருப்பர்.
-லியோ டால்ஸ்டாய்
எப்போதும் துணிவுடன்
இருக்க வேண்டும்.
தடைகள் ஏற்படும்போதெல்லாம்
துணிவு இருந்தால்தான்
செயல்பட முடியும்.
-லியோ
டால்ஸ்டாய்
வாழ்வில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களே, வாழ்க்கையை உண்மையாக வாழ வைக்கின்றன.
-லியோ டால்ஸ்டாய்
கஷ்டப்பட்டு உழையுங்கள். நீங்கள் உழைக்கும் எந்த உழைப்பும் வீணாவதில்லை.
-லியோ டால்ஸ்டாய்
சந்தோஷமான தருணங்களை பிடித்து கொள், காதலி,காதலிக்கபடு! அது ஒன்றே உண்மை,மற்றவை எல்லாம் மாயை.நாம் ஆர்வம்கொள்ளும் ஒரே விஷயம் இது தான்.
-லியோ டால்ஸ்டாய்
காத்திருக்க தெரிந்தவனுக்கே அனைத்தும் கிட்டும்.
-லியோ டால்ஸ்டாய்
எல்லோரும் உலகத்தை எப்படி மாற்ற வேண்டும் என்று எண்ணுகிறார்களே தவிர, ஒருவரும் தன்னைப் எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என எண்ணுவதில்லை.
-லியோ டால்ஸ்டாய்
எங்கு எளிமை, நேர்மை மற்றும் உண்மை இல்லையோ. அங்கு உயர்வும் மேண்மையும் இல்லை.
-லியோ டால்ஸ்டாய்
வீணாகாத ஒரே விஷயம் உழைப்பு மட்டுமே!
-லியோ டால்ஸ்டாய்
இன்றைய ஊதாரி
வருங்காலப் பிச்சைக்காரன்.
-லியோ
டால்ஸ்டாய்
நான் யார்,
நான் ஏன்
இங்கிருக்கிறேன் என்பதை
அறியாதவரை வாழ்க்கை
சாத்தியமற்றதே.
-லியோ
டால்ஸ்டாய்
thanks for sharing this quotes
பதிலளிநீக்கு1 Full essay on diwali in english for all student
2 Essay on mahatma gandhi - birth, education, profession, life work and death
3 Essay on importance of travel in education
4 26th January republic day essay in english
5 2000 Word essay on education system in india
6 Science is boon or curse essay 1500 words
7 Essay on problems in education system in india
8 Subhash chandra bose essay 1500 words for students
9 Conflict between religion vs science essay
Telugu quotes
பதிலளிநீக்கு