தூறலின்றி நனைக்கின்றாய் | Love and Life Quotes in Tamil-06
451.கனவுகளோடு காத்திருக்கும்
கண்களுக்கு காட்சி
தருவாயோ
இல்லை கண்மையை
கரைப்பாயோ
452.தூறலின்றி
நனைக்கின்றாய்
நினைவு தூறலில்
மனதை
453.கண்களில் தேங்கிக்கிடக்கும்
காதலை
இதழ்களில் உதிர்துவிடு
என்னிதயமும்
கொஞ்சம்
உயிர் வாழட்டும்
454.உன்னை தாண்டி
எதுவுமில்லை
என் சந்தோஷத்தின்
எல்லை
455.அழைப்பை நீ
யெடுக்க
தாமதித்தால் துடிக்குது
அதிகமாய் மனமும்
என்னவோ ஏதோவென்று
456.என்னுள்
நீயே முழுதும்
வியாபித்திருப்பதால்
வேறெதற்கும் இடமில்லை
மனதில்
457.மேடு பள்ளமென
சந்தித்தாலும்
அழகாய் ஓடும்
நதியாய்
என் மனமும்
நீந்துகிறது உன்னில்
458.மூச்சு காற்றின்
வெப்பத்தில்
மூட்டுகிறாய்
ஆசை தீயை
459.உன் தொல்லைகளும்
இன்பம் தான்
நீயில்லா பொழுதுகளில்
எனை சீண்டும்
போது
460.பலருடனும் வார்த்தைகள்
பரிமாறி கொண்டாலும்
ஒரு நொடி
வந்து போகும்
உன் நினைவுக்கு
இணையில்லை
எதுவும்