கி வீரமணி சிந்தனை வரிகள் # 05
K.Veeramani Inspirational Quotes in Tamil - Part 05
கி வீரமணி சிந்தனை வரிகள் # 05
K.Veeramani Inspirational Quotes in Tamil - Part 05
கி.வீரமணி சிந்தனை வரிகள் # 05
K.Veeramani Inspirational Quotes in Tamil - Part 05
41.எதையும் எதிர்கொண்டு வாழ்வோம் என்ற இன்றைய துணிச்சல், நாளை வரும் துன்பங்களைக் கூட துரத்தியடிக்கும், மறவாதீர்!
42.நமக்கு நெருக்கடி, வீழ்ச்சி, தோல்வி வரும் போது யார் நம்முடன் மாறாமல் நிற்கிறார்களோ, அவர்களே தலைசிறந்த நண்பர்கள்.
43.மனிதன் புகழ் ஆசை என்ற போதை ஏற ஏற மன நிறைவு கொள்ளத் தெரியாதவனாக ஆகிவிடுகிறான்.
44.உங்கள் மனத்துள், எதையும் பற்பல கோணங்களில் பார்க்கும் ஆழ்ந்த அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
45.மூளைக்கும் உணவு தேவைதானே? சிந்தனையைக் கூர்மைப்படுத்த - சானை தீட்ட அறிவுள்ள நூல்களே தக்க உணவுகள் அதற்கு.
46.செய்த தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்கும் பழக்கத்தை நமது குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
47.காதல் என்பது துள்ளும் இளமைப் பருவத்தில் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் கவர்ச்சியால் ஈர்க்கப்படுதல்.
48.முடிவு எடுக்கத் திணறாதீர், முடிவு எது வந்தாலும் ஏற்கும் ராணுவ வீரர்களைப் போன்ற நெஞ்சுரம் தேவை.
49.தூக்கம் நம்மை குளுமைப்படுத்தும் ஒரு மாமருந்து; புத்துணர்ச்சியைத் தரும் ஊக்க மருந்து.
50.எல்லோருக்கும் தேவையானது சிறந்த அறிவும், திறந்த இதயமும் ஆகும்.