கதே சிந்தனை வரிகள் - தமிழ் # 01
Goethe Inspirational Quotes in Tamil - Part 01
கதே சிந்தனை வரிகள் - தமிழ் # 01
Goethe Inspirational Quotes in Tamil - Part 01
கதே சிந்தனை வரிகள் # 01
Goethe Inspirational Quotes in Tamil - Part 01
1.நம் மன ஆர்வங்கள் எப்படியோ, அப்படியே நம் அபிப்பிராயங்களும் இருக்கும்.
2.நுண்ணறிவுடன் அன்பும் சேர்ந்து விட்டால் அதனால் அடைய முடியாதது எதுவுமே உலகில் இல்லை!
3.மனோ தைரியத்தை இழந்துவிட்டால் மனிதன் எல்லாவற்றையும் இழந்தவனாகிறான்.
4.உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
5.சலிப்பில்லாதவன் நிச்சியம் வெற்றியடைவான்.
6.உடல் ஆரோக்கியத்தில் எண்ணங்களின் பங்கு முக்கிய இடத்தை வகிக்கிறது. எப்போதும் நல்லதையே நம்பிக்கையுடன் சிந்திக்கும் பழக்கத்தை பழக்கமாகக் கொண்டிருங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
7.தன்னுடைய திறமையை பயன்படுத்துவதில் மகிழ்ச்சி காணாதவன் என்றுமே மகிழ்ச்சி காணமாட்டான்.
8.தாகத்திற்கு முன்பே கிணற்றைத் தோண்டு.
9.காதால் உபதேசம் கேட்பினும், கருத்தால் நம்பிக்கை உண்டாகாவிடின் கடுகளவு நன்மையும் உண்டாகாது
10.நல்ல ஆலோசனையை விரும்பிக் கேட்பது நம் திறமையை அதிகப்படுத்தும்.