கதே சிந்தனை வரிகள் - தமிழ் # 03
Goethe Inspirational Quotes in Tamil - Part 03
கதே சிந்தனை வரிகள் - தமிழ் # 03
Goethe Inspirational Quotes in Tamil - Part 03
கதே சிந்தனை வரிகள் # 03
Goethe Inspirational Quotes in Tamil - Part 03
21.செல்வம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது;
செல்வம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது.
22.ஆறாத துயரத்தையும் ஆற்ற வல்லது காலம்.
23.அரசனாயினும் ஏழையாயினும், தன் வீட்டில் அமைதியைக் காண்பவனே தலைச்சிறந்த மகிழ்ச்சி உடையவன்.
24.நமக்கு கற்றுக் கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்ல. யாரிடம் நாம் கற்றுக் கொள்கிறோமோ அவரே நமக்கு ஆசிரியர்.
25.செயல் பெரிதோ சிறிதோ நம்மால் செய்யக் கூடியவற்றை சலிப்பின்றிச் செய்பவரே போற்றுதற்கு உரியவர்.
26.வேலை செய்வதில் அவசரமும் கூடாது; இடையில் இளைப்பாறுவதும் கூடாது.
27.வாழ்க்கையில் நம்பிக்கையில்லாதவர்கள், இருந்தாலும் இறந்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
28.எவன் தன் வீட்டில் அமைதியைக் காண்கிறானோ அவன் அரசனாக இருந்தாலும் விவசாயியாக இருந்தாலும் மிகமிக மகிழ்ச்சியுடையவனாக இருப்பான்.
29.தம்மிடமுள்ள குறைகளை நீக்கிக் கொள்வதே நமக்கு ஏற்படக்கூடிய பெரிய அதிர்ஷ்டமாகும்.
30.அசைக்கமுடியாத நம்பிக்கையும், திட சித்தமும் கொண்ட மனிதனே உலகை தன் வழியில் தானே உருவாக்கிக் கொள்கிறான்.