கதே சிந்தனை வரிகள் - தமிழ் # 05
Goethe Inspirational Quotes in Tamil - Part 05
கதே சிந்தனை வரிகள் - தமிழ் # 05
Goethe Inspirational Quotes in Tamil - Part 05
கதே சிந்தனை வரிகள் # 05
Goethe Inspirational Quotes in Tamil - Part 05
41.இசை மகிழ்ச்சியை அதிகமாக்கும் துன்பத்தை குறைக்கும் நோயை அகற்றும் கோபத்தை ஆற்றும் உள்ளத்தில் அமைதி உடையவரே இசையில் இன்பத்தை அறிவார்.
42.அடக்குபவர் முன் சுதந்திரமாயிரு.
சுதந்திரம் கொடுப்பவர் முன் அடங்கியிரு.
43.இந்த உலகில் முக்கியமற்றது என்று எதுவுமில்லை, அனைத்துமே நமது கண்ணோட்டத்தை சார்ந்தது.
44.பல நூற்றாண்டின் அறிஞர்கள் அனைவரும் கூடியிருக்கும் மாளிகைதான் நூலகம். இனிவரும் அறிஞர்களுக்காக அம்மாளிகையின் கதவுகள் திறந்தேயிருக்கின்றன.
45.ஒருவன் தன்னைப் பற்றி அதிக உயர்வாக எண்ணுவதும் அதிகத் தாழ்வாக எண்ணுவதும் இரண்டுமே தவறுதான்.
46.எந்த செயலை இன்று தொடங்கவில்லையோ, அந்த செயலை ஒருபோதும் நாளை முடிக்க முடியாது.
47.பிரச்சினைக்கான சிகிச்சையை விட அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையே சிறந்தது.
48. அநேகர் கையிலுள்ள பணம் தீரப்போகும் பொழுதுதான் அதைச் சிக்கனமாய்ச் செலவு செய்ய ஆரம்பிப்பர். அதுபோல்தான் அநேகர் நேரத்தைச் செலவு செய்வதிலும்.