மேகங்கள் சூழ்ந்தநிலவாய் | தமிழ் SMS காதல் கவிதைகள் - 10
91.மேகங்கள் சூழ்ந்த
நிலவாய் நான்
காற்றாகி ஒளித்தந்தாய் நீ
92.என்னை அழவைத்து அழகு பார்ப்பதும் நீ தான்...
அருகில் வைத்து அரவணைப்பதும் நீயே தான்.....
93.நேசித்தலை விட பிரிதலின் போது உன் நினைவுகள் இரட்டை சுமை...
மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடு உன் இதயத்தை..!!
94.தென்றல் மோதி பூக்களுக்கு வலிப்பதில்லை...
உன் நினைவுகள் மோதி என் உள்ளம் வலிக்கின்றது...
95.ஏட்டில்
படித்த
எதுவும்...
மன
ஏட்டில்
பதியவில்லை...
உன்
நினைவுகளை
தவிர
96.வாடிய காதலுக்காக
தினமும் புதிதாய்
பூக்கின்றது கவிதை
97.நீங்காத இரவொன்று
வேண்டும்....அதில்
நிலையான கனவாக
நீ நிலைக்க வேண்டும்
98.தாயின்
நினைவில்
தவித்துப்போனான்
நானுமோர்
தாயாகிப்போனேன்
99.உன் நினைவுகள்
விழித்துக்கொள்ள
உறக்கமும்
கலைந்தது
100.தோளில்
சுமைகளை
சுமந்த
தோழன்
மார்பில்
சாயும்
வரம்
கொடுத்தான்
கணவனாகி